முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தாக்கம் கட்டுக்குள் வந்தாலும் வீரர்கள் தயாராக 42 நாட்கள் ஆகும் ; கிரேம் ஸ்மித் சொல்கிறார்

வியாழக்கிழமை, 2 ஏப்ரல் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

கேப்டவுன் : கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் வீரர்கள் தொடருக்கு தயாராக குறைந்தது ஆறு வாரங்கள் தேவை என தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு இயக்குனர் கிரேம் ஸ்மித் தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சர்வதேச, உள்ளூர் என அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வீரர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். சிறிது நேரம் உடற்பயிற்சிக்குப் பின் சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களுடன் உரையாடி பொழுதை போக்குகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் வீரர்கள் தயாராக குறைந்த 42 நாட்கள் ஆகும் என தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் போர்டின் இடைக்கால இயக்குனர் கிரேம் ஸ்மித் தெரிவித்துள்ளார். 

இது குறித்து முன்னாள் தென்ஆப்பிரக்கா கேப்டன் கிரேம் ஸ்மித் கூறுகையில், ஒவ்வொரு வாரமும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறித்து ஆராய்ந்து வருகிறோம். ஆனால் எந்தவொரு கிரிக்கெட் தொடருக்கும் வீரர்கள் தயாராக, அதற்கு முன் 42 நாட்கள் தேவை என்று மதிப்பிடுகிறோம் என்றார். தென்ஆப்பிரிக்கா அணி ஜூன் மாதத்தில் இலங்கை சென்று தலா மூன்று ஒருநாள் மற்றும் டி - 20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

ஸ்மித் கூறுவதை வைத்து பார்த்தால் மே மாதத்தில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்கள் வந்தால் கூட இலங்கை தொடர் சாத்தியமில்லை. அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடர் ஜூலை 15-ம் தேதிக்குப் பின் நடக்க இருக்கிறது. நிலைமை கட்டுக்குள் வந்தால் தென்ஆப்பிரிக்கா இந்தத் தொடரில் இருந்து கிரிக்கெட்டை தொடங்க வாய்ப்புள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து