முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா வைரஸ் பாதிப்பு: சீனாவில் நாய்கள் மற்றும் பூனைகளை சாப்பிட தடை

வியாழக்கிழமை, 2 ஏப்ரல் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

பெய்ஜிங் : கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து சீன நகரமான ஷென்சென்னில் நாய்கள் மற்றும் பூனைகளை சாப்பிட தடை விதித்துள்ளது.

சீனாவின் உகான் நகரில் கடல் உணவு  சந்தையில் இருந்து கொரானா வைரஸ் பரவியதாக கூறப்பட்டது. இந்த கொரோனா வைரஸ் உலக முழுவதும் பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் உலகெங்கிலும் உள்ள 9,35,000-க்கும் அதிகமான மக்களை பாதித்து, அவர்களில் 50 ஆயிரம் பேர் உயிரிழந்து உள்ளனர்.  இந்நிலையில் நோய் தொற்றை மேலும் பரவாமல் தடுக்கும் முயற்சியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி நாய்கள் மற்றும் பூனைகளை சாப்பிடுவதற்கான தடை மே 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெற்கு சீன தொழில்நுட்ப மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

செல்லப்பிராணிகளாக நாய்கள் மற்றும் பூனைகள் மற்ற எல்லா விலங்குகளையும் விட மனிதர்களுடன் மிக நெருக்கமான உறவை ஏற்படுத்தியுள்ளன, மேலும் நாய்கள் மற்றும் பூனைகள் மற்றும் பிற செல்லப்பிராணிகளை உணவாக உட்கொள்வதை தடை செய்வது வளர்ந்த நாடுகளிலும் ஹாங்காங் மற்றும் தைவானிலும் ஒரு பொதுவான நடைமுறையாகும் என்று நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தோன்றிய சீன நகரமான உகானில் இயல்பு நிலை திரும்பி உள்ளது. சீனாவின் உயர்மட்ட சட்டமன்றம் பிப்ரவரி பிற்பகுதியில் காட்டு விலங்குகளின் வர்த்தகம் மற்றும் நுகர்வுக்கு தடை விதிப்பதாகக் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மாகாண மற்றும் நகர அரசாங்கங்கள் தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றன, ஆனால் நாய்கள் மற்றும் பூனைகளுக்கு அந்த தடையை நீட்டிப்பது குறித்து ஷென்சென் மிகவும் வெளிப்படையாக இருந்து வருகிறது. இதுகுறித்து நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஷென்சென் மையத்தின் அதிகாரி லியு ஜியான்பிங் கூறுகையில், 

 

நுகர்வோருக்குக் கிடைக்கும் கோழி, கால்நடைகள் மற்றும் கடல் உணவுகள் போதுமானவை. கோழி மற்றும் கால்நடைகளை விட வனவிலங்குகள் அதிக சத்தானவை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, எனவே நாய் மற்றும் பூனைகளை உண்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து