முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் கிரிக்கெட்டே எனக்கு மிகவும் பிடித்தது என்கிறார் கோலி

வெள்ளிக்கிழமை, 3 ஏப்ரல் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : இங்கிலாந்து முன்னாள் பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சனுடன் இன்ஸ்டாகிராமில் லைவ் - செசனில் கலந்துரையாடிய விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிதான் மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் போட்டிகள் ஏதும் நடைபெறவில்லை. ஆகவே வீரர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். முன்னணி வீரர்கள் லைவ் - சாட் மூலம் தகவல்களை பகிர்ந்து கொண்டு ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகின்றனர்.  

அந்த வகையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்து அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சன் ஆகியோர் இன்ஸ்டாகிராம் லைவ் -செசன் மூலம் தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது விராட் கோலி டெஸ்ட் போட்டிதான் மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், 

டெஸ்ட் கிரிக்கெட், டெஸ்ட் கிரிக்கெட், டெஸ்ட் கிரிக்கெட், டெஸ்ட் கிரிக்கெட், டெஸ்ட் கிரிக்டெ் என நான் ஐந்து முறை கூறுவேன். ஏனென்றால் டெஸ்ட் கிரிக்கெட்டுதான் வாழ்க்கையின் பிரதிநித்துவம். நீங்கள் ரன்கள் அடிக்கலாம். அடிக்காமல் போகலாம். மற்றவர்கள் பேட்டிங் செய்யும் போது கைகளை தட்டலாம். நீங்கள் உங்களுடைய அறைக்கு செல்ல வேண்டும். அடுத்த நாள் விளையாட வரவேண்டும்.

நீங்கள் ரன் அடித்தாலும், அடிக்காவிட்டாலும் இந்த வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். நீங்கள் யாரிடமும் போட்டியிடாத வாழ்க்கை போன்றது. டெஸ்ட் கிரிக்கெட் என்னை சிறந்த மனிதனாக உருவாக்கியுள்ளது என்று தெரிவித்தார். விராட் கோலி 86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7240 ரன்களுடன் அடித்துள்ளார். சராசரி 53.63 ஆகும். 27 சதங்கள் விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து