முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் இருந்து சென்ற தென்ஆப்பிரிக்க வீரர்களுக்கு கொரோனா தொற்று இல்லை

வெள்ளிக்கிழமை, 3 ஏப்ரல் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

கொல்கத்தா : கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஒருநாள் தொடரை ரத்து செய்து இந்தியாவில் இருந்து சொந்த நாடு திரும்பிய தென்ஆப்பிரிக்கா வீரர்களுக்கு நோய் தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தென்ஆப்பிரிக்கா அணி கடந்த மாதம் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்தது. மார்ச் 12-ம் தேதியில் இருந்து 18-ம் தேதி வரை இந்தத் தொடர் நடைபெற இருந்தது. இமாச்சல பிரதேசம் தரம்சாலாவில் நடைபெற இருந்த முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. அதன்பின் லக்னோவில் நடைபெற இருந்த 2-வது போட்டியும், கொல்கத்தாவில் நடைபெற இருந்த  3-வது போட்டியும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டது. தென்ஆப்பிரிக்கா வீரர்கள் 18-ம் தேதி இந்தியாவில் இருந்து புறப்பட்டனர்.

இந்தியாவில் அப்போது கொரோனா வைரஸ் பாதித்திருந்தது உறுதி செய்யப்பட்டதால் தென்ஆப்பிரிக்கா சென்ற வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். 14 நாட்கள் தனிமைப்பட்ட காலம் நிறைவு அடைந்த நிலையில் அவர்கள் யாருக்கும் கொரோனா தொற்றுக்கான அறிகுறி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் சுதந்திரமாக வெளியில் நடமாடலாம். ஆனால், தற்போது தென்ஆப்பிரிக்காவில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் இன்னும் இரண்டு வாரத்திற்கு அவர்களால் வெளியில் செல்ல முடியாது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து