முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடும்ப அட்டைகள் இல்லாத 3-ம் பாலினத்தவருக்கு சிறப்பு நிவாரண தொகுப்பு: அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்க முதல்வர் உத்தரவு

சனிக்கிழமை, 4 ஏப்ரல் 2020      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், குடும்ப அட்டை இல்லாத மூன்றாம் பாலினத்தவருக்கும் சிறப்பு நிவாரண உதவியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி அவர்களுக்கு தலா 12 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ஆகிய அத்தியாவசிய பொருட்கள் கொண்ட தொகுப்பு வழங்கப்படும்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ஏராளமானோர் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். கொரோனா நோய் தொற்றினை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் அதேவேளையில், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது.

குறிப்பாக, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள், ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள் ஆகியோருக்கு நிவாரண உதவியையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி வருகின்றது.

இந்த நிலையில், மூன்றாம் பாலினத்தவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு, அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது, குடும்ப அட்டை இல்லாத மூன்றாம் பாலினத்தவருக்கு தலா 12 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ஆகிய அத்தியாவசிய பொருட்கள் கொண்ட தொகுப்பினை வழங்க தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதன் மூலம் குடும்ப அட்டை இல்லாத 4,022 மூன்றாம் பாலினத்தவர் பயன்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி பொதுமக்களுக்கு ரூ. ஆயிரமும், அரிசி உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது ரூ. ஆயிரம் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து