முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா: வீட்டுக் கண்காணிப்பில் 90,541 பேர் உள்ளனர்: சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி

சனிக்கிழமை, 4 ஏப்ரல் 2020      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 485-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். மேலும் வீட்டு கண்காணிப்பில் 90,541 பேர் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் பரவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 485-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது;-

இன்று(நேற்று) புதிதாக கொரோனா பாதித்த 74 பேரில் 73 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள்.  வீட்டுக் கண்காணிப்பில் 90,541 பேர் உள்ளனர். டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் இதுவரை 422 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 407 பேரின் ரத்த மாதிரி பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது. 4,248 பேரின் ரத்த மாதிரிகள் சோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை சோதனை செய்யப்பட்டதில் 3,356 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை. கொரோனா பாதிப்பு பற்றி பதற்றம் அடைய தேவையில்லை. தமிழகம் முழுவதும் 29 லட்சம் பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.  7,23,491 வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 53 வயது பெண் உயிரிழந்துள்ளார். நேற்று ஒரே நாளில் 2 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து