முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா : அதிக நிதி தேவைப்படுவதால் எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு 2 ஆண்டுகளுக்கு ரத்தாகிறது

திங்கட்கிழமை, 6 ஏப்ரல் 2020      இந்தியா
Image Unavailable

கொரோனா வைரஸ் தொற்றை தடுத்து நிறுத்த அதிகமான அளவு நிதி தேவைப்படுவதால் இரண்டு ஆண்களுக்கு எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரை மையமாகக் கொண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கை தொடர்பாக மாநில முதல்வர்கள், அரசு அதிகாரிகள், மருத்துவ துறையினர் என பல தரப்பினருடன் பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாடி வருகிறார்.இதன் தொடர்ச்சியாக மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நேற்று நடந்தது.

அவருடன் மூத்த அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷ உள்ளிட்டோரும் பங்கேற்றனர். வேறு சில அமைச்சர்கள் ஆங்காங்கே காணொலியில் இணைந்தனர். கொரோனா தொற்று பரவாமல் தடுப்பது, இதற்காக அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் மாநில அரசுகளுடன் இணைந்து கொரோனா ஒழிப்பு பணியை மேற்கொள்வது பற்றியும் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசித்தார்.கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

கொரோனா வைரஸ் தொற்றை தடுத்து நிறுத்த அதிகமான அளவு நிதி தேவைப்படுவதால் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. இதனால் 2020- 21, 2021 -22 இரண்டு ஆண்களுக்கு எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கான இந்த நிதி 7900 கோடி ரூபாயாகும். இதனை சுகாதார பணிகள், கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சி பணிகளுக்காக பயன்படுத்திக் கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

ஜனாதிபதி சம்பளம் குறைகிறது

இந்நிலையில் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியும் தங்களது ஊதியத்தை 30 சதவீதம் குறைத்துக் கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக மத்திய அமைச்சரவை தெரிவித்துள்ளது.மேலும் அனைத்து மாநில கவர்னர்களும் தங்கள் ஊதியத்தை 30 சதவீதம் குறைத்துக் கொள்ள ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து