முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தொற்று பரவலை தடுக்க மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீடிக்க மாநில அரசுகள் விருப்பம்: பிரதமர் நரேந்திர மோடி தகவல்

புதன்கிழமை, 8 ஏப்ரல் 2020      இந்தியா
Image Unavailable

கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், ஊரடங்கை நீட்டிக்க மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளதாக பாராளுமன்றக் குழுத் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார். தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், வரும் 14-ம் தேதி ஊரடங்கை திரும்பப் பெறும் முடிவு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் ஊரடங்கு முடியும் முன் வரும் சனிக்கிழமை பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் கலந்துரையாட உள்ளார். அப்போது, ஊரடங்கைப் படிப்படியாக விலக்குவது குறித்து முதல்வர்களின் ஆலோசனைகளை அவர் கேட்பார் எனக் கூறப்படுகிறது

முன்னதாக, நாடாளுமன்றக் குழுத் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலமாக நேற்று உரையாடினார். கொரோனா எதிரொலியாக, உலக நாடுகள் கடும் சவாலை எதிர்கொண்டுள்ளதாகவும், இந்த சவாலை நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். நாட்டில் ஒவ்வொருவரின் உயிரும் அரசுக்கு முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில் வரும் 14-ம் தேதியுடன் ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டாம். மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று மாநில அரசுகளும், வல்லுநர்களும் பரிந்துரைத்துள்ளனர். எனவே வரும் 14-ம் தேதி ஊரடங்கை திரும்பப் பெறும் முடிவு இல்லை என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதனால் ஏப்ரல் இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்து பிரதமர் மோடி வருகிற 11-ம் தேதி மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளார். 

காணொளி காட்சி மூலமாக நடந்த நாடாளுமன்ற குழு தலைவர்களுடனான உரையாடலில் காங்கிரசின் குலாம் நபி ஆசாத், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சுதீப் பாண்டியோ பாத்யாய், சிவசேனாவின் சஞ்சய் ராவத், பிஜேடியின் பினாக்கி மிஸ்ரா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார், சமாஜ்வாடி கட்சியின் மிதுன் ரெட்டி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் அ.தி.மு.க. சார்பில் நவநீதகிருஷ்ணன், தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு ஆகியோர் பிரதமரிடம் பேசினர். முன்னதாக, முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் பிரதமர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி உரையாடியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஊரடங்கு முடியும் முன் வரும் சனிக்கிழமை பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் கலந்துரையாட உள்ளார். அப்போது, ஊரடங்கைப் படிப்படியாக விலக்குவது குறித்து முதல்வர்களின் ஆலோசனைகளை அவர் கேட்பார் எனக் கூறப்படுகிறது. ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது விலக்குவதா என்பது குறித்து இந்தக் கலந்துரையாடலுக்குப் பின்னரே முடிவெடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து