முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர்க்கப்பலில் 114 மாலுமிகளுக்கு கொரோனா அமெரிக்க கடற்படை தலைவர் ராஜினாமா

வியாழக்கிழமை, 9 ஏப்ரல் 2020      உலகம்
Image Unavailable

அமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பலான தியோடர் ரூஸ்வெல்டில் பணியாற்றும் 114 மாலுமிகளுக்கு கொரோனா பாதிப்பு இருந்ததை தொடர்ந்து அமெரிக்க கடற்படை தலைவர் தாம்ஸ் மோட்லி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அணுசக்தியில் இயங்கும் அமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பலான தியோடர் ரூஸ்வெல்டில் பணியாற்றும் 114 மாலுமிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த கப்பல் குவாம் தீவில் உள்ள கடற்படை தளத்தில் தனிமைப்படுத்தி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்த கப்பலின் தலைமை அதிகாரி குரோஷியர் ஊடகத்துக்கு எழுதிய கடிதம் மூலமாகவே மாலுமிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது வெளியுலகத்துக்கு தெரியவந்தது. எனவே பகிரங்கமாக உதவி கேட்டு, பீதி ஏற்படுத்தியதாக கூறி அவரை அமெரிக்க கடற்படை தலைவர் (பொறுப்பு) தாம்ஸ் மோட்லி பதவி நீக்கம் செய்தார். இது சர்ச்சையானது. மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பதிலாக கப்பலின் தலைமை அதிகாரியை பதவி நீக்கம் செய்தது தவறானது என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. மேலும் அமெரிக்க கடற்படை தலைவர் (பொறுப்பு) தாம்ஸ் மோட்லி பதவி விலக வேண்டுமெனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இந்த நிலையில், தாம்ஸ் மோட்லி நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை ராணுவ அமைச்சர் மார்க் எஸ்பரிடம் வழங்கினார். இது குறித்து மார்க் எஸ்பர் கூறுகையில், அதிபர் டிரம்பின் ஒப்புதலோடு தாம்ஸ் மோட்லியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டேன். அமெரிக்க ராணுவத்தின் மூத்த அதிகாரியான ஜிம் மெக்பெர்சன் புதிய கடற்படை தலைவராக (பொறுப்பு) நியமிக்கப்படுகிறார் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து