முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா குறித்த சந்தேகங்களை தீர்க்க தானியங்கி குரல் வழி சேவை: முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்

வியாழக்கிழமை, 9 ஏப்ரல் 2020      தமிழகம்
Image Unavailable

கொரோனா வைரஸ் குறித்த சந்தேகங்களை தீர்க்க ஐ.வி.ஆர்.எஸ். தானியங்கி  குரல் வழி சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1135 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 72 பேர் உயிரிழந்துள்ளனர். 117 பேர் குணமடைந்துள்ளனர். அடுத்த இடத்தில் 738 பேருக்கு தொற்று பாதிப்புடன் தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது. 8 பேர் உயிரிழந்துள்ளனர். 21 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கோரோனா வைரஸ் பரவலை தடுக்க மாநில முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.அந்த வகையில், கொரோனா வைரஸ் தொடர்பான ஐ.வி.ஆர்.எஸ். தானியங்கி குரல் வழி சேவையை சென்னை தலைமை செயலகத்திலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். 94999 12345 என்ற அவசர உதவி எண்ணில் கொரோனா தொடர்பான விளக்கங்களை பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கள், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து