முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆட்டம் கண்டுகொண்டிருக்கும் பொருளாதாரம் : கொரோனா வைரஸ் ஒரு பக்கம் வரப்போகும் புயல் ஒரு பக்கம் : கதிகலங்கி போய்இருக்கும் அமெரிக்கா

ஞாயிற்றுக்கிழமை, 12 ஏப்ரல் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : கொரோனா வைரஸை காட்டிலும் மோசமான மற்றும் பொருளாதார ரீதியில் சரிவை ஏற்படுத்தும் ஒன்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை மேலும் புரட்டி போடவுள்ளதாக வெளியான தகவலால் அமெரிக்கா ஆடிப்போயுள்ளது. 

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் ,வெளியிட்டு உள்ள புள்ளிவிவரத்தின் படி கொரோனா உயிரிழப்பில் வல்லரசு நாடான அமெரிக்கா தற்போது இத்தாலியை முந்தி முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கொரோனா 20,577 பேரின் உயிரைப் பறித்திருக்கிறது, கொரோனாவால் 5,27,111 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அமெரிக்காவில் உள்ள அனைத்து மாநிலங்களும் இத்தொற்றை பேரழிவாக அறிவித்துள்ளன. 

எனினும், இத்தொற்றால் புதிதாக பாதிக்கப்படுபவர்கள் மற்றும் மரணங்கள் சற்று குறைந்து வருவதாக தெரிவித்த அமெரிக்காவின் தொற்று நோயியல் தலைவர் அந்தோனி பாசி, இதனால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாது என்று தெரிவித்தார்.

ஏப்ரல் 30-ம் தேதி வரை சமூக விலகல் மற்றும் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களில் 1.6 கோடி அமெரிக்கர்கள் வேலையிழந்துள்ளதோடு, கொரோனா வைரசால் அமெரிக்க பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

கொரோனா வைரஸை காட்டிலும் மோசமான மற்றும் பொருளாதார ரீதியில் சரிவை ஏற்படுத்தும் ஒன்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை மேலும் புரட்டி போடவுள்ளதாக வெளியான தகவலால் ஆடிப்போயுள்ளது அமெரிக்கா. அமெரிக்கா கொரோனாவை தடுக்க முடியாமல் திணறி வருகிறது. இந்த நிலையில் அந்த நாட்டு மக்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அதுவும் குறிப்பாக புளோரிடா மாகாண மக்களுக்கு கொரோனாவை விட மோசமான ஒன்று வரும் ஜூன் மாதம் வரபோகிறது. அதுதான் அட்லாண்டிக்கில் ஏற்படவுள்ள புயல் சீசன்.

இதுகுறித்து நிபுணர்கள் கூறுகையில், கொரோனா மோசமானது என்றால் புயல் மிகவும் மோசமானது. கொரோனா காலத்தில் புயலும் சேர்ந்து வருவதால் அதன் பாதிப்பு இரண்டைக் காட்டிலும் மிக மோசமாக இருக்கும். அதுவும் பன்மடங்கு பெருகும். இந்த சீசன் ஜூன் மாதத்தில் தொடங்கும். இதனால் பொருளாதார ரீதியிலும் சரிவு ஏற்படும்.

புயலை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தனர். அதிலும் கொலோராடோ பல்கலைக்கழகத்தின் வானியல் ஆராய்ச்சியாளர்கள் ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளனர். வழக்கமான புயல் சீசனை விட இந்த ஆண்டு பாதிப்புகளும் வீரியமும் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை 4 முக்கிய புயல்கள் ஏற்படும்.

அப்போது மணிக்கு 110 மைல்கள் வேகத்தில் காற்று வீசக் கூடும். இந்த நேரத்தில் பாதிக்கப்படும் மக்களை வீடுகளை விட்டு வெளியேற்றி பேருந்துகளில் பொது இடங்களில் தங்க வைப்பது வழக்கம். ஆனால் இப்போது கொரோனா அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த மக்களை எப்படி கும்பல் கும்பலாக தங்க வைப்பது என்பது குறித்த யோசனையில் பேரிடர் மேலாண்மைக் குழு உள்ளது.

இது போன்ற சிக்கலான நேரத்தில் எப்படி சமூக விலகலை கடைப்பிடிப்பது பாதிக்கப்படும் மக்களை உறவினர்கள் வீடுகளில் கூட தங்க வைத்துக் கொள்ளமாட்டார்கள். என்ன செய்வது என தெரியாமல் நிர்வாகம் குழப்பத்தில் உள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து