முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக சுகாதார அமைப்புக்கு வழங்கி வந்த நிதியை நிறுத்தியது அமெரிக்கா அதிபர் டிரம்ப் அதிரடி நடவடிக்கை

புதன்கிழமை, 15 ஏப்ரல் 2020      உலகம்
Image Unavailable

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா விவகாரத்தில் நடந்து வந்த மோதலைத் தொடர்ந்து உலக சுகாதார அமைப்புக்கு வழங்கி வந்த அனைத்து நிதியையும் நிறுத்துமாறு தனது நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர மாதம் முதன்முதலில் சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகானில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா நோய்த்தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவி உள்ளது.  நோய்த்தொற்றுக்கு மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா. இந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்று மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் என்பது போன்ற பல்வேறு தகவல்களை சீனா அரசு மறைத்து விட்டதாகவும், நோய்த்தொற்றின்  தீவிர தன்மை குறித்து பிற நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்காமல் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயல்பட்டதாகவும், அமைப்பின் தாமதமான செயல்கள் உலக நாடுகளுக்கு பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தி விட்டதாக  குற்றம்சாட்டி வந்த டிரம்ப், அந்த அமைப்பிற்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதியை உடனடியாக நிறுத்துமாறு செவ்வாய்க்கிழமை தனது நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

கொரோனா நோய்த்தொற்று பரவல் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பின் தவறான நிர்வகிப்பு மற்றும் நோய்த்தொற்று பரவல் குறித்த தகவல்களை உலக நாடுகளுக்கு தெரிவிக்காமல் மூடி மறைந்தது குறித்து விரிவான மதிப்பீடு செய்ய எனது நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன். அந்த மதிப்பீடு விசாரணை முடியும் வரை உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா வழங்கி வந்த அனைத்து நிதியையும் நிறுத்தி வைக்குமாறு தனது நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி உள்ளதாக டிரம்ப் கூறினார்.

உலகம் முழுவதும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்ற கொரோனா ஒரு நோய்த்தொற்றாக மாற வழிவகுத்த சீனாவுடனாவுக்கு உலக சுகாதார அமைப்பு ஆதரவாக செயல்பட்டதாக உலகளவில் விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து