முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோனி அளித்த நம்பிக்கையால் தான் என்னால் பந்துவீச முடிந்தது :முகமது ஷமி

வியாழக்கிழமை, 16 ஏப்ரல் 2020      விளையாட்டு
Image Unavailable

2015 - ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் உடைந்த முழங்காலுடன் விளையாடியது குறித்து முகமது ஷமி விவரித்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்பவர் முகமது ஷமி. 2015 - ம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தார். உமேஷ் யாதவுக்குப்பின் (17 விக்கெட்) அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய பந்து வீச்சாளர் இவர் தான். இந்த தொடரின்போது இவருக்கு முழங்காலில் முறிவு ஏற்பட்டது. விளையாட முடியாத சூழ்நிலையில் விளையாடினேன். குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் டோனி கொடுத்த நம்பிக்கையால்தான் விளையாட முடிந்தது என்று விவரித்துள்ளார்.

இதுகுறித்து முகமது ஷமி கூறுகையில், 2015 உலக கோப்பை போட்டியின்போது முழங்காலில் காயம் ஏற்பட்டது. தொடர் முழுவதும் காயத்துடன் விளையாடிய பின்னர் என்னால் நடக்கக் கூடிய முடியவில்லை. 2015 உலக கோப்பையில் விளையாடுவதற்கு காரணம் நிதின் பட்டேலின் நம்பிக்கைதான். முதல் போட்டியில் விளையாடும்போது முழங்கால் உடைந்துவிட்டது. மூட்டும் தசையும் ஒரே அளவில் இருந்தது. ஒவ்வொரு நாளும் அதில் இருந்த கெட்ட நீரை வெளியே எடுத்தனர். மூன்று வலி நிவாரணம் ஊசி போட்டுக்கொண்டேன். அரையிறுதி போட்டிக்கு முன் சக வீரர்களுடன் என்னால் இனிமேல் விளையாட முடியாது என்று கூறினேன். போட்டி நடைபெற்ற நாளில் எனக்கு வலி அதிகமாக இருந்தது. அணி நிர்வாகத்துடன் பேசினேன். ஆனால் அவர்கள் எல்லாம் சரியாகிவிடும் என்றனர். கேப்டன் எம்.எஸ்.டோனி, அணி நிர்வாகம் என்மீது அதிகமான நம்பிக்கை வைத்திருந்தனர். இது அரையிறுதி. இந்த நேரத்தில் புதிய பந்து வீச்சாளருடம் களம் இறங்க முடியாது என்றனர். முதல் ஐந்து ஓவரில் விக்கெட் ஏதும் எடுக்காமல் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தேன். ஆரோன் பிஞ்ச், வார்னர் ஆகியோர் திணறிய போதும், பந்து எட்ஜ் ஆகி கேட்ச் ஆகவில்லை. அதன்பின் டோனி என்னிடம் கூறியதால் நான் வெளியேறினேன். வலி நிவாரணத்திற்கான ஊசி போட்ட பின்னர் நிலைமை மிகவும் மோசமானது. என்னால் நீண்ட தூரம் ஓட முடியாது. அதனால் பந்து வீச இயலாது என்று கேப்டன் எம்.எஸ்.டோனியிடம் கூறினேன். ஆனால் எங்கள் மீது நம்பிக்கை உள்ளது. மாற்று வீரரை ஓடுவதற்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார். 60 ரன்களுக்கு மேல் கொடுக்காமல் பந்து வீசுங்கள் என்றார். இதைவிட மோசமான நிலையில் நான் பந்து வீசியது கிடையாது. என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டதாக சிலர் கூறினார்கள். சிலர் என்னால் விளையாட முடியாது என்றார்கள். ஆனால் துணிச்சலுடன் தற்போது இங்கே இருக்கிறேன் என்றார். உலக கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த பின்னர் ஆபரேசன் செய்து கொண்ட முகமது ஷமி, சுமார் ஒன்றரை ஆண்டுகள் விளையாடாமல் ஓய்வில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து