முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் 3 கட்டங்களாக ஊரடங்கு தளர்வு: ஆளுநர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தார் அதிபர் டிரம்ப்

வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2020      உலகம்
Image Unavailable

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு இல்லாத இடங்களில் ஊரடங்கை படிப்படியாக தளர்த்துவதற்கான பொறுப்பை அதிபர் டிரம்ப், மாநில ஆளுநர்களிடம் ஒப்படைத்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது. உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிக மக்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பிலும் முதலிடத்தில் உள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை சரிசெய்து மீண்டு வருவதற்கான வழிமுறைகளை அரசு ஆராயத் தொடங்கி உள்ளது. அதிக பாதிப்பு இல்லாத இடங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வணிக நிறுவனங்கள் திறக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். இந்நிலையில், வரும் மாதங்களில் பொருளாதாரங்களை மீட்டெடுப்பது குறித்தும், மூன்று கட்டங்களாக ஊரடங்கை தளர்த்துவது குறித்தும் மாநில ஆளுநர்களுக்கு அதிபர் டிரம்ப் சில வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறார். மாநிலங்கள் படிப்படியாக ஊரடங்கை தளர்த்திக் கொள்ளலாம் என்றும், மத்திய அரசின் உதவியுடன் அந்தந்த மாநில ஆளுநர்களே இதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளலாம் என்றும் டிரம்ப் உறுதி அளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து