முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ஓபன் டென்னிஸ் குறித்து ஜூன் மாதம் முடிவு: டென்னிஸ் சங்கம்

வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2020      விளையாட்டு
Image Unavailable

ரசிகர்கள் இல்லாமல் அமெரிக்கா ஓபன் நடைபெற வாய்ப்பில்லை, ஜூன் மாதம் போட்டி நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று டென்னிஸ் சங்கம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆகஸ்ட் மாதம் 31- ந் தேதியில் இருந்து செப்டம்பர் மாதம் 13 - ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றால் லண்டனில் நடைபெற இருந்த விம்பிள்டன் டென்னிஸ் ரத்து செய்யப்பட்டது. அப்போது அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதியில் நடைபெற வாய்ப்புள்ளதாக அமெரிக்க டென்னிஸ் சங்கம் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கொரோனா வைரஸ் சுழற்றி அடித்து வருகிறது. லட்சக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜூன் மாதம் போட்டி நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என அமெரிக்க டென்னிஸ் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க டென்னிஸ் சங்கத்தின் தலைமை நிர்வாகி மைக் டவ்ஸ் கூறுகையில்,இறுதி முடிவு ஜூன் மாதத்தில் எடுக்கப்படும். ஆனால், ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்த வேண்டும் என்பது எங்களது இலக்கு அல்ல. ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்துவது, போட்டியை ரத்து செய்வது போன்ற எந்த முடிவையும் எடுக்கவில்லை. தற்போது போட்டிக்கான சாத்தியம் இல்லாத சூழ்நிலைதான் நிலவுகிறது. அதிர்ஷ்டவசமாக நாங்கள் வருடத்தின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியை நடத்த உள்ளோம். அதற்கான நேரங்கள் இன்னும் உள்ளன. போட்டியை நடத்த வேண்டும் என்பதுதான் எங்களது லட்சியம். இருந்தாலும் வீரர்கள், ரசிகர்கள், எங்களுடைய ஸ்டாப் ஆகியோரின் உடல்நலம் மிக,மிக முக்கியம். ஜூன் மாதம் முடிவை எடுத்துக் கொள்ளலாம் என முடிவு செய்துள்ளோம். நாங்கள் மருத்துவ ஆலோசனைக்குழுவை அணுக இருக்கிறோம். ஐந்து அல்லது ஆறு மருத்துவர்களை கொண்ட குழுவை உருவாக்குவோம். அவர்கள் கொடுக்கும் ஆலோசனைப்படி நாங்கள் முடிவை எடுப்போம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து