முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாரீசில் தெருக்களை சுத்தப்படுத்தும் தண்ணீரில் காணப்பட்ட கொரோனா

திங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2020      உலகம்
Image Unavailable

பாரீசில் தெருக்களை சுத்தப்படுத்தும் தண்ணீரில் புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் தலிநகர் பாரீஸ் சீன் நதி மற்றும் எவர்க் கால்வாயிலிருந்து எடுக்கப்பட்ட தண்ணீர், வீதிகளை சுத்தம் செய்வதற்கும், நகரத்தின் பூங்காக்கள் மற்றும் தோட்டங்களுக்கு நீர் வழங்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. தற்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்படுவது இல்லை. இந்த நீர் அலங்கார நீர் ஊற்றுகளுக்கும் வழங்கப்படுகிறது. இந்த நீரில் புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் குடிநீர் மாசுபடுவதற்கான ஆபத்து இல்லை என்று நகர அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாரிஸ் நீர் அதிகாரசபையின் ஆய்வகம் தலைநகரைச் சுற்றி சேகரிக்கப்பட்ட 27 மாதிரிகளில் நான்கில் சிறிய அளவிலான வைரஸைக் கண்டறிந்தது, இது ஒரு முன்னெச்சரிக்கையாக வலையமைப்பை உடனடியாக நிறுத்த வழிவகுத்தது என செலியா பிளேவல் ஏஎப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். தொற்றுநோயின் விளைவாக 20,000 - க்கும் மேற்பட்ட இறப்புகளைப் பதிவுசெய்துள்ள பிரான்ஸ் - உலகிலேயே நான்காவது மிக அதிகமான பலி எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட ஐந்து வாரங்களாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து