முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேசத்தில் கட்டுப்பாடுகளை மீறி இறுதி சடங்கில் ஆயிரகணக்கானோர் பங்கேற்றதால் பொதுமக்கள் அச்சம்

திங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2020      உலகம்
Image Unavailable

வங்காள தேச அரசின் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி இறுதி சடங்கில் அதிகமானோர் கூடியது மக்களிடம் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

வங்காளதேச இஸ்லாமிய அமைப்பின் தலைவர் இறந்ததால் அவருக்கு இறுதி சடங்கு நிகழ்த்த மக்கள் அதிக அளவில் கூடியுள்ளனர். இஸ்லாமியர்களின் தலைவரான மவுலான சுபைர் அகமத் அன்சாரியின் இறுதி சடங்கு தொழுகைக்கு 5 பேருக்கு மேல் வரக்கூடாதென்று அறிவுறுத்திய நிலையில், கட்டுக்கடங்காத மக்கள் வந்து கூடியுள்ளனர்.

பிரக்மன்பாரியா மாவட்டத்தில் மக்கள், சாலைகளில் அதிகளவில் நிரம்பியதால் அதை கட்டுப்படுத்த இயலாத அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அந்நாட்டில் தற்போதுவரை 2,456பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 91பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றும், பரிசோதனை கருவிகள் குறைப்பாட்டால் குறைந்த அளவில் கணக்கிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து