ஆன்மீக புத்தகங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து படிக்கலாம்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

புதன்கிழமை, 22 ஏப்ரல் 2020      ஆன்மிகம்
Tirumala 2020 04 22

ஊரடங்கு நேரத்தில் ஆன்மீக புத்தகங்களை பக்தர்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து படிக்கலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கொரோனாவை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பொழுதுபோக்கு அம்சங்களுக்காக நேரம் செலவிடுவதை காட்டிலும், தங்களது சிந்தனைகளை ஆன்மீகத்தில் திசை திருப்பும் விதமாக ஏழுமலையானின் பக்தர்கள் தங்கள் மனதை மாற்றி கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.தேவஸ்தானம் சார்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 6 மொழிகளில் சப்தகிரி என்ற பெயரில் மாதாந்திர நாளிதழ் வெளியிடப்பட்டு வருகிறது.

இதுதவிர 781 புத்தகங்கள் பல்வேறு மொழிகளில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இவை அனைத்தையும் பக்தர்கள் ஆன்லைனில் www.tirumala.org என்ற இணைய தளத்தில் சென்று தங்களுக்கு தேவையான புத்தகங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து கொள்ளலாம். ஊரடங்கு காலத்தில் தங்கள் சிந்தனையை உயர்த்தி பயனுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டும்.இவ்வாறு தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து