கொரோனா சிகிச்சைக்கான வெண்டிலேட்டரை பாகிஸ்தானுக்கு வழங்குவோம்: அதிபர் டிரம்ப்

சனிக்கிழமை, 25 ஏப்ரல் 2020      உலகம்
Trump 2020 04 25

அமெரிக்க அதிபர் டிரம்ப் பாகிஸ்தானுக்கு வெண்டிலேட்டர் வழங்குவோம் என்று கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,  வெண்டிலேட்டர் (செயற்கை சுவாச கருவி) தேவைப்படும் உலக தலைவர்களுடன் நான் பேசினேன். அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய அமெரிக்கா உதவும் என்று கூறினேன். அந்த வகையில், பாகிஸ்தானுக்கு வெண்டிலேட்டர் அனுப்பி வைப்போம். இதே போன்று ஸ்பெயின், இத்தாலி, மெக்சிகோ, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கும் வெண்டிலேட்டர்கள் அனுப்பி வைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.  பாகிஸ்தானுக்கு வெண்டிலேட்டர் இலவசமாக கொடுக்கப்படுகிறதா? அல்லது விலைக்கு அளிக்கப்படுகிறதா? என்பது பற்றி அவர் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து