முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். போட்டி இருக்கும் வரை ஆர்.சி.பி. அணியை விட்டு விலக மாட்டேன் :விராட் கோலி

சனிக்கிழமை, 25 ஏப்ரல் 2020      விளையாட்டு
Image Unavailable

ஐ.பி.எல். போட்டியில் விளையாடும்வரை இந்த அணியை விட்டு விலகமாட்டேன் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கடந்த சில வருடங்களாக மோசமாக விளையாடி வருகிறது. 5 முறை பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றும், 3 முறை இறுதிச்சுற்றில் விளையாடியும் பிரபல வீரர்களைக் கொண்டிருந்தும் ஆர்.சி.பி.அணியால் இதுவரை ஒருமுறை கூட ஐ.பி.எல். கோப்பையை வெல்லமுடியவில்லை.

2018 - ல் 6 -ம் இடம், 2017, 2019 ஆண்டுகளில் கடைசி இடம் என கடந்த மூன்று வருடங்களாக மிக மோசமாகவே விளையாடி வருகிறது. இதையடுத்து, அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன், பந்துவீச்சுப் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டனர். அதற்குப் பதிலாக தலைமைப் பயிற்சியாளராக சைமன் காடிச்சும், அணி இயக்குநராக மைக் ஹெஸ்ஸனும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில், ஐ.பி.எல். போட்டியில் விளையாடும்வரை இந்த அணியை விட்டு விலகமாட்டேன் என்று விராட் கோலி தெவித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ஆர்.சி.பி.வீரர்கள் விராட் கோலியும் டிவில்லியர்ஸும் உரையாடினார்கள். அப்போது விராட் கோலி கூறியதாவது:-

ஆர்.சி.பி.அணியை விட்டு விலகுவது குறித்து என்னால் யோசிக்கக் கூட முடியாது. ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் வரை இந்த அணியை விட்டு விலகமாட்டேன். ஐ.பி.எல்.லில் விளையாடும் வரை உரிமையாளருக்காக விளையாட விரும்புகிறேன். அணியை விட்டு வெளியேறும் எந்த சூழ்நிலையும் இதுவரை இல்லை என தெரிவித்தார். இதேபோல், டிவில்லியர்ஸ் கூறுகையில், நான் நிறைய ரன்கள் எடுக்க வேண்டும். எனக்கும் ஆர்.சி.பி. அணியை விட்டு விலக விருப்பமில்லை. வருங்காலத்தில் இதன்மூலம் கிடைத்த உறவுகளையே எண்ணிப் பார்ப்போம். குறிப்பிட்ட ஆட்டத்தை அல்ல. சில அருமையான தருணங்களை எண்ணிக் கொள்வோம். அதை ஒருபோதும் இழக்கமுடியாது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து