முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதே எனது குறிக்கோள்: பி.வி.சிந்து

சனிக்கிழமை, 25 ஏப்ரல் 2020      விளையாட்டு
Image Unavailable

உலக மகளிர் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெறுவதைத் தவிர வேறு எதை பற்றியும் யோசிக்கவில்லை என்று பி.வி.சிந்து கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற 25 - வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் முன்னாள் உலக சாம்பியனும், 4-ம் நிலை வீராங்கனையுமான ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை வீழ்த்தி உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றார். மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் முதன் முறையாக இந்திய வீராங்கனை பி.வி. சிந்து தங்கம் வென்றார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்களான ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோருடன் டபுள் ட்டிரொபுல் என்ற தலைப்பில் பி.வி. சிந்து கூறியதாவது:-

2016 ஒலிம்பிக்ஸ் போட்டிக்குப் பிறகு 6,7 வெள்ளிப் பதக்கங்களை வென்று விட்டேன். வெள்ளிப் பதக்க சிந்து என மக்கள் தன்னை அழைப்பதை விரும்பவில்லை. உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெறுவதைத் தவிர வேறு எதையும் பற்றி யோசிக்கவில்லை. எனவே தங்கம் வெல்ல வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தேன். அந்த ஆட்டத்தில் 100 சதவீதம் எனது திறமையை வெளிப்படுத்தினேன். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதே குறிக்கோளாக இருந்தேன். இவ்வாறு அவர் கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து