கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாகிஸ்தான் ஏவுகணை சோதனை

ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2020      உலகம்
Pakistan-26-04-2020

Source: provided

இஸ்லாமாபாத் : கொரோனா அச்சுறுத்தல் மற்றும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாகிஸ்தான் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனை நடத்தியது.

பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. அங்கு வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாகிஸ்தான் நேற்று முன்தினம் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை ஏவி சோதித்தது. அரேபிய கடல் பகுதியில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் கடற்படை தெரிவித்துள்ளது. இது குறித்து கடற்படை செய்தி தொடர்பாளர் அர்ஷித் ஜவத் கூறுகையில், போர்க்கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் இருந்து ஏவப்பட்ட கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் கடலில் வைக்கப்பட்டிருந்த இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்தன என கூறினார்.

மேலும், இந்த ஏவுகணைகள் அதிநவீன தொழில் நுட்பத்துடனும், வான் பயண மின்னணுவியல் தொழில் நுட்பத்துடனும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை மிக துல்லியமாக கடலில் உள்ள இலக்குகளை தாக்கும் வல்லமை படைத்தவையாகும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த ஏவுகணை சோதனை கடற்படை தளபதி ஜாபர் மஹ்மூத் அப்பாசி மற்றும் கடற்படையின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து