முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலீசார் கெடுபிடியால் நடந்து சென்ற 2 கர்ப்பிணி பெண்களுக்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ். ஆறுதல்

திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2020      தமிழகம்
Image Unavailable

போடியில் போலீசாரின் கெடுபிடியால் நடந்து சென்ற 2 கர்ப்பிணி பெண்களுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆறுதல் கூறியுள்ளார்.

முழு ஊரடங்கு உத்தரவு தற்போது கடுமையாக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தேனி மாவட்டம் போடியில் ஊரடங்கால் ஆட்டோவில் பயணம் செய்த கர்ப்பிணி பெண்களை போலீசார் வழிமறித்து நிறுத்தி உள்ளனர். தொடர்ந்து ஆட்டோவை அனுமதிக்காததால் கர்ப்பிணி பெண்கள் நடந்து செல்ல நேரிட்டது. இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வருத்தப்பட்டதாக டுவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், 2 கர்ப்பிணி பெண்களும் நடந்து செல்லும் சூழ்நிலை ஏற்பட்டதால் அந்த 2 பெண்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து கேட்டு அறிந்து ஆறுதல் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். கர்ப்பிணி பெண்களின் நலனை கருத்தில் கொண்டு தேனி மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களிலும் தலா ஒரு ஆம்புலன்ஸ் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ஆம்புலன்ஸ் சேவையை 045 46261039 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் டுவிட்டர் பதிவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து