முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பந்தை தவறவிட்டால், உங்களால் டோனி ஆக முடியாது என்று ரசிகர்கள் உணர்கிறார்கள்: கே.எல். ராகுல் சொல்கிறார்

திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2020      விளையாட்டு
Image Unavailable

பந்தை தவற விட்டால் உங்களால் டோனி ஆக முடியாது என்று ரசிகர்கள் உணர்கிறார்கள் என்று விக்கெட் கீப்பராக பணியாற்றும் கே.எல். ராகுல் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருந்த டோனிக்கு பதில் மாற்று விக்கெட் கீப்பரை இந்திய அணி நிர்வாகம் தேடிவருகிறது. இளம் வீரரான ரிஷப் பண்ட்-ஐ தயார் படுத்தியது. ஆனால் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் பணியில் சொதப்பியதால் இந்தியா விளையாடிய கடைசி இரண்டு மூன்று தொடர்களில் கே.எல். ராகுலை விக்கெட் கீப்பராக களம் இறக்கியது.அவர் சிறப்பாக பேட்டிங் செய்வதுடன் விக்கெட் கீப்பர் பணியையும் நன்றாக செய்து வருகிறார். இதனால் ஒயிட்-பால் கிரிக்கெட்டில் அவரை விக்கெட் கீப்பராக செயல்பட வைக்க இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. டோனிக்கு அடுத்து யார் விக்கெட் கீப்பராக செயல்பட்டாலும், விக்கெட் கீப்பிங் பணியில் பந்தை தவற விட்டால், இவரால் டோனி ஆக இயலாது என்று ரசிகர்கள் ஒப்பிட ஆரம்பித்து விடுகிறார்கள். இதுதான் பிரச்சனை என்று கே.எல். ராகுல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கே.எல். ராகுல் கூறுகையில், கிரிக்கெட் போட்டிகளை பார்க்கும் ரசிகர்களுக்கு நான் நீண்ட காலமாக விக்கெட் கீப்பர் பணியில் இருந்து விலகி இருக்கவில்லை என்பது தெரியும். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக பணியாற்றியுள்ளேன். கர்நாடகா அணிக்காக விளையாடிய போதெல்லாம் விக்கெட் கீப்பிங் பணியை செய்துள்ளேன். நான் எப்போதும் விக்கெட் கீப்பர் பணியில் என்னை தொடர்புபடுத்திக் கொண்டுதான் இருக்கிறேன். என்னைப் போன்ற ஒருவர் அணிக்கு தேவை என்று நிர்வாகம் நினைத்தால் அதற்கு நான் தயாராக .இருக்கிறேன் என்பதை எப்போதுமே சொல்லி வருகிறேன். இந்திய அணிக்காக நான் விக்கெட் கீப்பராக பணியாற்றும் போது சற்று பதற்றம் அடைவேன். ஏனென்றால் ரசிகர்களிடம் இருந்து நெருக்கடி ஏற்படும். நான் ஒரு பந்தை தவற விட்டால் கூட, ரசிகர்கள் இவர் டோனிக்கு மாற்று வீரராக முடியாது என்று உணர்கிறார்கள். டோனி போன்ற ஜாம்பவான் வீரர்களுக்கு மாற்று நபராக வரும்போது அவர்களுக்கு நெருக்கடி இருக்கும் என்பதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு கே.எல். ராகுல் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து