முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருமிநாசினிகளை தவறாக பயன்படுத்தினால் பொறுப்பேற்க முடியாது: அதிபர் டிரம்ப்

செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2020      உலகம்
Image Unavailable

கிருமிநாசினிகளை ஊசி மூலம் செலுத்தி கொரோனாவை அழிக்க முயற்சிக்கலாம் என்ற ஆபத்தான பரிந்துரையை செய்த அமெரிக்க அதிபர் டிரம்ப், தற்போது அவற்றை மக்கள் தவறாக பயன்படுத்தினால் தான் பொறுப்பேற்க முடியாது என தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசால் அமெரிக்காவில் 10 லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 56,797 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 14 ஆயிரம் பேர் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற டிரம்பிடம், கிருமிநாசிகளை தவறாக பயன்படுத்துவது அதிகரித்து வருவதாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். ஏன் என்று என்னால் எண்ணிப் பார்க்க முடியவில்லை என கூறினார். விடாமல் நிருபர்கள், இதற்கு நீங்கள் பொறுப்பேற்பீர்களா? என கேட்டனர். என்னால் பொறுப்பேற்க முடியாது என கூறி விட்டார்.

கடந்த வாரம் கொரோனா வைரஸ் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பின் போது, கிருமிநாசினிகள் கைகளிலுள்ள வைரஸை கொல்லும் போது அவற்றை ஊசி மூலம் உள்ளே செலுத்தியோ அல்லது கிட்டத்தட்ட சுத்தம் செய்வது போன்றோ ஏதாவது செய்ய வழி இருக்கிறதா என கேள்வி எழுப்பினார். டிரம்பின் இந்த பேட்டிக்கு பிறகு கிருமிநாசினி நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகள் வெளிப்புற பயன்பாட்டுக்கு மட்டுமே என அறிக்கை வெளியிட்டன. அமெரிக்க நோய் தடுப்பு மையங்கள் கிருமிநாசினிகளை முறையாக பயன்படுத்துவது குறித்து மக்களுக்கு ஆலோசனைகள் வழங்கியது.பின்னர், கிண்டலுக்குத்தான் அவ்வாறு கூறியதாக டிரம்ப் சமாளித்தார்.

இது பற்றி பேசிய டிரம்ப் கட்சியைச் சேர்ந்த மேரிலேன்ட் கவர்னர் லோகன், ஊசி மூலம் கிருமிநாசினிகளை செலுத்துவது கொரோனாவை அழிக்க பயனளிக்குமா என கேட்டு மாநிலம் முழுவதும் இருந்து பலர் உதவி மையங்களை தொடர்பு கொள்கின்றனர். உலகளவிலான நோய் தொற்றுக்கு நடுவில் மக்கள் அச்சத்தில் இருக்கும் போது, அதிபர் உண்மை தகவல்களை மட்டுமே செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுவது முக்கியம் என கருதுகிறேன் என்று கூறினார். டிரம்பின் பேட்டியைத் தொடர்ந்து அமெரிக்காவில் சிலர் பிளீச்சிங் பவுடர் கொண்டு வாய் கொப்பளித்ததும், டிடர்ஜென்ட் போட்டு மூக்கை சுத்தப்படுத்திய சம்பவங்களும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து