முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒலிம்பிக்கில் கபடி போட்டியை சேர்ப்பது தான் ஒரே இலக்கு: மத்திய அமைச்சர்

செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2020      விளையாட்டு
Image Unavailable

ஒலிம்பிக் போட்டியில் கபடி விளையாட்டை சேர்ப்பதுதான் எங்களுடைய ஒரே இலக்கு என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கி இருந்த போதிலும், கபடியும் பிரபலமான விளையாட்டாக திகழ்கிறது. ஆசிய நாடுகள் கபடி விளையாட்டில் தலைசிறந்து விளங்குகின்றன. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. தற்போது கபடி ஆகிய விளையாட்டு போட்டிகளில் உள்ளது. ஆனால் ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்படவில்லை. ஒலிம்பிக்கில் கபடி போட்டியை இணைப்பதுதான் ஒரே இலக்கு என மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இதுகுறித்து மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு கூறுகையில், கபடி விளையாட்டு ஏற்கனவே ஆசிய போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆசிய நாடுகளும் ஒன்றிணைந்து கபடியை ஒலிம்பிக்கில் சேர்க்க உறுதி கொள்ள வேண்டும். இதுதான் எங்களுடைய ஒரே இலக்கு என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து