முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவிடம் இழப்பீடு கேட்க அமெரிக்கா நடவடிக்கையா? அதிபர் டிரம்ப் பதில்

புதன்கிழமை, 29 ஏப்ரல் 2020      உலகம்
Image Unavailable

கொரோனா வைரஸ் விவகாரத்தில் பெருத்த சேதம் அடைந்துள்ள அமெரிக்கா, அதற்காக சீனாவிடம் இழப்பீடு கேட்க நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்விக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பதில் அளித்தார்.

சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பரில் தோன்றிய கொரோனா வைரஸ், 4 மாத காலத்தில் 200 - க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி விட்டது.
அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் இந்த வைரஸ் தொற்று நோயால் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளன.உலகமெங்கும் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு ஆளாகி உள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமான உயிரிழப்பு ஏற்பட்டு விட்டது. இதில் அமெரிக்காவின் நிலைதான் பரிதாபமாக அமைந்துள்ளது. நான்கில் ஒரு பங்குக்கு மேலான உயிர்ப்பலி அமெரிக்காவில்தான் நேரிட்டுள்ளது. 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இந்த தொற்றுநோய் 29ஆயிரம் பேருக்குத்தான் பரவி இருக்கிறது, பலி எண்ணிக்கையும் 1000 என்ற அளவில் தான் உள்ளது. அதற்கு காரணம், ஆரம்ப நிலையிலேயே ஊரடங்கு உள்ளிட்ட கண்டிப்பான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியதுதான்.

இந்த வைரஸ் பரவல் தொடர்பான உண்மையான தகவல்களை சீனா ஆரம்பத்தில் மறைத்து விட்டதாக அமெரிக்கா இன்றளவும் கருதுகிறது. இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளும்கூட அமெரிக்காவுடன் இதில் கருத்தொற்றுமை கொண்டுள்ளன. சீனா நினைத்திருந்தால், வெளிப்படையாக நடந்து கொண்டிருந்தால், தகவல்களை ஆரம்ப கட்டத்திலேயே பகிர்ந்து கொண்டிருந்தால் துரதிர்ஷ்டவசமான உயிர்ப்பலிகளையும், பொருளாதார இழப்புகளையும் தடுத்து இருக்க முடியும் என இந்த நாடுகள் கருதுகின்றன.இதையொட்டி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வாஷிங்டன் வெள்ளை மாளிகை ரோஜா தோட்டத்தில் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, கொரோனா வைரசால் ஏற்பட்ட இழப்புகளுக்காக 130 பில்லியன் யூரோ சுமார் ரூ.10 லட்சத்து 79 ஆயிரம்கோடிவழங்க கேட்டு சீனாவுக்கு ஜெர்மனி பில் அனுப்ப திட்டமிட்டிருக்கிறதாமே, உங்களது நிர்வாகமும் இதே போன்று இழப்பீடு கேட்க நடவடிக்கை எடுக்குமா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு டிரம்ப் பதில் அளித்து கூறியதாவது:-

அவர்களை விட நாம் எளிதானதை செய்ய முடியும். அதை விட எளிதாக செய்வதற்கு நம்மிடம் நிறைய வழிகள் இருக்கின்றன. நாம் இன்னும் இறுதி தொகையை நிர்ணயம் செய்து முடிக்கவில்லை. ஆனால் அது மிகவும் கணிசமான தொகையாக அமையும்.நீங்கள் உலகத்தைப் பார்த்தால், அதாவது உலகளாவிய சேதத்தை பார்த்தால், அமெரிக்காவுக்குத்தான் கூடுதல் சேதம். ஆனால் இது உலகத்தின் சேதம்தான். நான் நிறைய வழிகள் இருக்கிறது என்று சொன்னேன். இந்த கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு சீனாவை பொறுப்பேற்க வைக்க முடியும். நாம் இது தொடர்பாக மிக தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். உங்களுக்கும் கூட தெரிந்திருக்கலாம்.நாம் இப்போது சீனாவுடன் மகிழ்ச்சியாக இல்லை. நாம் ஒட்டுமொத்த நிலவரத்தில் மகிழ்ச்சியாக இல்லை. இதை தடுத்து இருக்க முடியும் என்பதுதான் நமது நம்பிக்கை. இதை ஒட்டுமொத்த உலகுக்கும் பரவாமல் பார்த்துக்கொண்டிருந்து இருக்க முடியும். அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். எனவேதான் தீவிர விசாரணை நடத்துகிறோம். உரிய நேரத்தில் இதுபற்றி தெரிந்து கொள்வீர்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து