முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முகராசி முதல்வர் சேற்றில் கால் வைத்ததால்தான் தமிழகம் தானிய விளைச்சலில் செழிப்பானது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதம்

வியாழக்கிழமை, 30 ஏப்ரல் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : முகராசி முதல்வர்  சேற்றில் கால் வைத்ததால்தான் தமிழகம் தானிய விளைச்சலில் செழிப்பானது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் கால அவசர கட்டுப்பாட்டு அறையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

உலகத்தை அச்சுறுத்தும் இந்தக் கோவிட் - 19 தொற்றுநோயில் இருந்து தமிழக மக்களை காப்பாற்ற தாய் தமிழகத்தின் தலை மகனாய் களத்தில் நின்று பணியாற்றுகிறார் நமது முதலமைச்சர்.

37 வருவாய் மாவட்டங்களில் களநிலவரங்களை அறிந்து தேவையான வழிகாட்டுதலையும், அறிவுரைகளையும், போர்க்கால நடவடிக்கை எடுத்து மாவட்ட நிர்வாகத்திற்கு உரிய வழிகாட்டுதலை வழங்கிவருகிறார் .இந்த நோய் தொற்றுகளை தடுத்து பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக கட்டுக்குள் வைத்துள்ளார்.இந்த 144 தடை காலத்திலும் மக்களுக்கு அனைத்து அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கச் செய்து வருகிறார். 37 மாவட்டங்களிலும் 24 மணி நேரம் இயங்கும் கட்டுப்பாட்டு அறையை செயல்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வு, நோய்த்தடுப்பு ,மருத்துவ ஆலோசனை , சோதனை சாவடிகள் என அனைத்தையும் ஒருங்கிணைத்து இந்த முழு ஊரடங்கிலும் மக்களுக்கு இந்த முகாமில் மூலம் முதலமைச்சர் வழிகாட்டி வருகிறார். 37 வருவாய் மாவட்டங்களிலும் காணொலி காட்சி மூலம் களநிலவரங்களை கேட்டு அறிந்து தேவையான அறிவுரைகளை முதலமைச்சர் வழங்கி வருகிறார்.குறிப்பாக வேளாண் பணியில் இருக்கும் விவசாயிகளுக்கு உபகரணங்கள் ,இடுபொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் .

அதேபோல் வேளாண் பொருள்களை சந்தைக்கு கொண்டு செல்ல எந்தத் தடையும் இருக்கக்கூடாது என்று முதலமைச்சர் கூறியுள்ளார். மக்களுக்கு விரைவில் இயல்பு வாழ்வை உருவாக்கும் வண்ணம் சிகப்பு, ஆரஞ்சு உரிய பகுதிகளில் உரிய நடவடிக்கை மேற்கொண்டு அதை பச்சை பகுதிகளாக மாற்றிட போர்க்காலநடவடிக்கை எடுத்து வருகிறார். அதேபோல் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இரண்டு முறை கிருமிநாசினிகள் தெளிக்கவேண்டும் பொதுக் கழிப்பிடங்களில் மூன்று முறை கிருமி நாசினி தொளிக்க வேண்டும். அத்தியாவசிய பொருள்கள் மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு முதலமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார். கடந்த திங்கட் கிழமை பாரதப் பிரதமர் பல்வேறு முதலமைச்சர்களிடம் காணொலி காட்சி மூலம் ஆய்வு செய்தபோது நமது முதலமைச்சர் தமிழகத்துக்கு தேவையான நிதிகளை கோரிக்கை வைத்தார் .நோய் கட்டுக்குள் கொண்டுவர பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை நல்கி வருகின்றனர் மக்கள் ஒத்துழைப்பால் தான் இந்த நோயில் இருந்து விடுபடமுடியும்.

நமது முதலமைச்சர் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார் நோய் தடுப்பு நடவடிக்கையும் சரி , உயர்சிகிச்சை அளிப்பதிலும், குணம் அடைய எண்ணிக்கையிலும் சரி, இறப்பு சதவீதம் குறைவிலும்சரி, அத்தியாவசிய பொருள்கள் தங்கு தடையின்றி கிடைப்பதும் சரி ,ஆதரவற்றோர் முதியோர் ஆகியோர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் சரி இப்படி பல்வேறு மாநிலங்களுக்கு வழிகாட்டியாக முதலமைச்சர் திகழ்கிறார் .இதை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அரசுக்கு நல்ல பெயர் வந்துவிட்டது என்ற பொறாமையால் பல்வேறு பொய்யான தகவலை கூறி வருகிறார்.

கேள்வி. ஸ்டாலின் காணொளி காட்சி குறித்து?

பதில். நாட்டின் தலைமகன் நமது முதலமைச்சர் மக்களுக்கு புதிய விடியலைத் தந்திடும் வகையில் விழிப்புணர்வு, நோய் கட்டுப்பாடு, நிவாரணம், உணவு ,உரிய மருத்துவ சிகிச்சை, குணமடைவோர் எண்ணிக்கை உயர்வு, இறப்பு சதவீதம் குறைவு என்று அனைத்து பிரிவிலும் ஒரு தீர்க்க தரிசனமாக சிந்தித்து, மதிநுட்பத்துடன், வல்லுனர்களின் கருத்தை கேட்டறிந்து ,தனது நீண்டகால மக்கள் பணி அனுபவத்தால் மக்களுக்கு முழு பாதுகாப்பு திட்டத்தை உருவாக்கி கொண்டதை பார்த்த எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் அச்சம் கொண்ட காரணத்தினால் தினந்தோறும் தனது வீட்டிலிருந்தபடியே தனது கட்சிகாரர்களிடம் வீடியோ மூலம் உறவாடி வருவது ஊடக விளம்பரத்துக்கான செயலுக்காகத்தான் ஊர் மக்களுக்காக அல்ல. ஸ்டாலின் அறிவித்துள்ள ஹெல்ப்லைன் நம்பரில் அவரது கட்சிக்காரர்களே பேசி கொள்கிறார்கள். 

கேள்வி;தி.மு.க. தலைவர் அனைவரும் வாருங்கள் ஒன்றிணைவோம் என்று கூறியுள்ளாரே? 

பதில்; தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித்தலைவர் முதல் கிராம நிர்வாக அதிகாரி வரை இந்தப் புனிதப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மக்களின் குறைகள் எல்லாம் உடனுக்குடன் சரி படுத்தப்பட்டு வருகிறது முதலமைச்சரின் செயல்களை பொறுத்து கொள்ள முடியாமல் எதிர்கட்சி தலைவர் செயல்பட்டு வருகிறார். 

கேள்வி. ஸ்டாலின் அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்க சிரமமாகவும் விலை உயர்வாக உள்ளதாகவும் கூறியுள்ளாரே 

பதில்; ஸ்டாலின் எதையும் ஆராயாமல் கூறக்கூடாது.நமது முதலமைச்சர் திருவாரூர் பகுதியில் விவசாயிகள் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பங்கேற்க சென்றபோது அங்கு வயல்வெளியில் சேற்றில் கால் வைத்த நேரம் இந்தாண்டு நமக்கு விளைச்சல் அதிகமாக உள்ளது. எல்லாம் முதலமைச்சர் முகராசி தான் காரணம் அதற்கான புள்ளி விவரத்தை கூறுகிறேன்.நமது தமிழகத்தில் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் 2019 -2020 ம் ஆண்டு கொள்முதல் பருவத்தில் 10.4.2020 வரை டெல்டா மாவட்டங்களில் 1508 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 15,78,934 மெட்ரிக் டன்னும், டெல்டா அல்லாத மாவட்டங்களில் 532 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 4,08,599 மெட்ரிக் டன்னும், கூட்டுறவு மற்றும் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு இணையத்தின் மூலம் 21 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 1,03,578 மெட்ரிக் டன்னும், மொத்தம் 2061 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 20,91,112 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் விவசாயிகளுக்கு 3,954 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது இதில்3,55,343 விவசாயிகள் பயனடைந்துள்ளனர் .இது கடந்த 2018-2019 ஆண்டில் கொள்முதல் பருவத்தில்10.4.2019 வரை 1776 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 16,56,940 மெட்ரிக் டன் அளவில் தான் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.இந்த ஆண்டில் தமிழகமெங்கும் அதிக விளைச்சல் காரணமாக முதலமைச்சர் ஆணைப்படி 2061 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 10.4.2020 வரை 21 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் ,இன்னும் சுமார் 7 லட்சம் மெட்ரிக் டன் நெல் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டு, நடப்பு கொள்முதல் பருவத்தில் மொத்தம் 28 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கொள்முதல் அளவானது தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்ச கொள்முதல் சாதனையாகும். நமது முதலமைச்சர் அளித்துள்ள சலுகைகளால் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கடந்த ஆண்டு 69,698 மெட்ரிக் டன்னாக இருந்த கிடங்கு சேமிப்பு இந்த ஆண்டு 90,739 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது.அதேபோல் சிறு தானியங்கள் எல்லாம் தேவைக்கு அதிகமாக உள்ளது.அனைத்து பகுதிகளிலும் சமூக இடைவெளி விட்டு காய்கறி கடைகள் அமைக்கப்பட்டு உள்ளது அது மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் 9,915 மேற்பட்ட நடமாடும் காய்கறிகள் மற்றும் விநியோக வாகனங்களில் இதுவரை 5,478 மெட்ரிக் டன் காய்கறி மற்றும் பழங்கள் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன தற்போது கூடுதலாக 142 வாகனங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.ஸ்டாலின் இது போன்ற புள்ளி விவரங்களை குறித்துக்கொள்ள வேண்டும் அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு வழங்குவதில் சரி, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதில் சரி ,ஒரு முன் மாதிரி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது எதையும் கண்ணை மூடிக்கொண்டு எதையும் ஆராயாமல் சொல்லக்கூடாது ஸ்டாலின் கூறும் கருத்துக்களை மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.நமது முதலமைச்சர் எடுத்துவரும் நடவடிக்கைகளை எல்லாம் ஆய்வு மேற்கொண்டலே ஒரு பெரிய புத்தகமே போடலாம். ஆனால் ஸ்டாலின் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பேசிவருகிறார் இதை நாட்டு மக்களும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். அவர் எப்படி பேசினாலும் அதைப்பற்றி கவலை கிடையாது எங்களுக்கு மக்கள் பணியாற்றுவது தான் எங்கள் கடமை .எதிர்க்கட்சினர் நம் நாட்டை பற்றி பேசாமல் பக்கத்துவீடு எதிர்வீடுகளை பற்றி தான் அதிகம் பேசுவர்கள்.எதிர்கட்சிதலைவர் அரசியல் முகவரியை இழந்து விட கூடாது என்பதற்காக காழ்புணர்ச்சி உடன் பேசி வருகிறார் .

கேள்வி; தமிழகத்தில் இருக்கும் வெளி மாநிலத்தவர்களுக்குஎன்ன வழி செய்யப்பட்டுள்ளது?

பதில்,வெளிமாநில தொழிலாளர்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு முதலமைச்சரே நேரிடையாக சென்று அவர்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார் மேலும் அவருக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் விருப்பப்பட்டால் அவர்கள் ஊர் செல்வதற்கு தேவையான உதவிகளை முதலமைச்சர் செய்து தருவார். இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். 

இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் வினய், மாநகராட்சி ஆணையாளர் விசாகன், அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் சங்கு மணி உட்பட பலர் இருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து