முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீரவ் மோடியை நாடு கடத்தும் வழக்கு விசாரணை வரும் 11-ல் தொடங்குகிறது

வியாழக்கிழமை, 30 ஏப்ரல் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

லண்டன் : நீரவ் மோடியை நாடு கடத்தக்கோரும் வழக்கின் 5 நாள் இறுதி விசாரணை வரும் 11-ம் தேதி தொடங்கும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.

இந்தியாவை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நே‌‌ஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்தார். சி.பி.ஐ. நெருக்கடி முற்றியதும் வெளிநாட்டுக்கு தப்பினார். இந்தியா விடுத்த வேண்டுகோள்படி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் லண்டனில் அவர் கைது செய்யப்பட்டார். நீரவ் மோடியை நாடு கடத்தக்கோரி இந்தியா சார்பில் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதுதொடர்பான வழக்கு விசாரணை, மாவட்ட நீதிபதி சாமுவேல் கூஸ் முன்னிலையில் நடைபெற்றது.

சிறையில் இருந்தபடி, காணொலி காட்சி மூலம் நீரவ் மோடி ஆஜர்படுத்தப்பட்டார். பெயர், பிறந்த தேதி ஆகியவற்றை உறுதிப்படுத்த மட்டுமே அவர் பேசினார். அப்போது, நீரவ் மோடியை நாடு கடத்தக்கோரும் வழக்கின் 5 நாள் இறுதி விசாரணை வரும் 11-ம் தேதி தொடங்கும் என்று நீதிபதி அறிவித்தார்.ஆனால், தற்போதைய ஊரடங்கு கட்டுப்பாடுகளால் விசாரணையை நடத்துவது குறித்து அவர் கவலை தெரிவித்தார். பின்னர், இறுதி விசாரணைக்கு முன்பு, 7-ம்தேதி, வக்கீல்களை மட்டும் வைத்து ஒத்திகை நடத்துவது என்று இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து