முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா பிறந்தநாள் : வீரர்கள், ரசிகர்கள் வாழ்த்து

வியாழக்கிழமை, 30 ஏப்ரல் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா பிறந்தநாநாளையொட்டி வீரர்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா நேற்று தன்னுடைய 33 - வது பிறந்தநாளைக் கொண்டாடினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில், மூன்று இரட்டை சதங்கள் குவித்த வீரருக்கு உலகம் முழுவதிலிருந்து வாழ்த்து மழை பொழிகிறது. ரோகித் சர்மாவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக பி.சி.சி.ஐ., அவருடைய டெஸ்ட் அறிமுக போட்டியில் கலந்து கொண்ட வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டது. பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஹிட்மேன்  ஸ்பெஷல் நாளான இன்று வெள்ளை உடையில் ஹிட்மேனின் அற்புதமான ஆட்டம். இது அவர் விளையாட விரும்பும் களங்களில் கொல்கத்தாவும் ஒன்று ஹாப்பி பெர்த்டே ரோகித் என்று பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. 

ரோகித் சர்மாவின் பிறந்தநாளில் முதலில் வாழ்த்து தெரிவித்தவர்களில் சுரேஷ் ரெய்னாவும் ஒருவர். பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரோகித். இந்த மோசமான காலங்களில் உங்களுக்கும் குடும்ப ஆரோக்கியத்திற்கும் மகிழ்ச்சிக்கும் வாழ்த்துக்கள். வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள், ஒரு கேக் தயாரியுங்கள்  என்று சுரேஷ் ரெய்னா ட்விட் செய்தார். ரெய்னாவுக்கு அடுத்துப் பல கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

இந்திய கிரிக்கெட் அணியின் டபுள் செஞ்சுரி நாயகன் ஹிட் மேன் ரோகித் சர்மா நேற்று தனது 33 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்த நாள் குறித்து ரோகித் சர்மாவின் மனைவி, அவரது இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது:- நான் சுவாசிக்க முடியாத வரை என்னை சிரிக்க வைக்கும் ஒருவருக்கு, எனக்கு பிடித்த பயணத் தோழருக்கு, என் சிறந்த நண்பருக்கு, சிறந்த அப்பாவுக்கு, அவரது வாழ்க்கை சார்ந்து இருந்தாலும் பாட முடியாத ஒருவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நான் விரும்பிய மிகச் சிறந்த, பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரோ என தெரிவித்துள்ளார். ரோதிகா ரோகித் சர்மாவின் சில படங்களையும் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து