முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சார்ஜாவில் போலீசாருக்கு சுகாதார பாதுகாப்பு: வாகனங்கள் மீது கிருமி நாசினி தெளிக்க ஸ்மார்ட் கேட் அமைப்பு

சனிக்கிழமை, 2 மே 2020      உலகம்
Image Unavailable

Source: provided

சார்ஜா : போலீசார் மற்றும் வாகனங்கள் மீது கிருமி நாசினி தெளிக்கும் வகையில் சார்ஜா போக்குவரத்து மற்றும் ரோந்து பிரிவு போலீஸ் அலுவலகத்தில் ‘ஸ்மார்ட் கேட்’ அமைக்கப்பட்டுள்ளது.

அமீரகத்தில் ‘கொரோனா’ வைரசால் தினந்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக நாடு முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடந்து வருகிறது. அதே போல் சார்ஜாவிலும் தினந்தோறும் இரவு 10 முதல் மறுநாள் காலை 6 மணி வரை பொது இடங்களில் கிருமி நாசினி திரவம் தெளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நேரத்தில் மட்டும் பொதுமக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் நடமாடுவதை கண்காணிக்கவும், பாதுகாப்பு பணிகளுக்காகவும் சார்ஜா போலீசின் ரோந்து படை பிரிவினர் வாகனங்கள் மூலம் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் அவர்கள் பல்வேறு இடங்களுக்கு செல்லும் சூழ்நிலை உள்ளது. எனவே ரோந்து பணிகளில் ஈடுபடும் போலீசாரின் நலன் கருதி கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்கு சார்ஜா போக்குவரத்து மற்றும் ரோந்து படை அலுவகத்தில் 4 நவீன ‘ஸ்மார்ட் கேட்’டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

எனவே இதன் உள்ளே நுழையும்போது கிருமி நாசினி மருந்து தெளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு தொழில்நுட்ப கருவிகள் இந்த ‘ஸ்மார்ட் கேட்’டின் உள்ளே ஏற்படுத்தப்பட்டுள்ளது. அன்றாடம் பணிக்கு வரும் போலீசார் மற்றும் பணி முடிந்து வீட்டிற்கு செல்பவர்கள் என அனைவரும் ‘ஸ்மார்ட் கேட்’டில் நுழைந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதே போல் ரோந்து வாகனங்கள் முழுவதும் கிருமி நீக்கம் செய்வதற்காகவும் மற்றொரு ‘ஸ்மார்ட் கேட்’ அமைக்கப்பட்டுள்ளது. அதன் வழியாக போலீஸ் வாகனங்கள் செல்லும் போது ‘ஸ்மார்ட் கேட்’டின் அனைத்து பக்கங்களில் இருந்தும் வாகனங்களின் மீது கிருமி நாசினி பீய்ச்சியடிக்கப்படுகிறது. இதன் மூலம் போக்குவரத்து மற்றும் ரோந்து படையில் பணியாற்றும் போலீசாருக்கு சுகாதார பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து