முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனாவிற்கான மருந்தை கண்டுபிடிக்க இன்னும் எவ்வளவு காலம் ஆகும்?: பில்கேட்ஸ்

சனிக்கிழமை, 2 மே 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : கொரோனாவிற்கான மருந்தை கண்டுபிடிக்க இன்னும் 9 மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம் என்று உலக கோடீஸ்வரரும், மைக்ரோசாப் நிறுவனத்தின் உரிமையாளருமான பில்கேட்ஸ் கூறியுள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமா 210-க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இப்படி ஒரு கொடிய வைரஸ் உலகையே அச்சுறுத்தலாம் என்று சில ஆண்டுகள் முன்பு உலக கோடீஸ்வரரும், மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் கூறியிருந்தார். இதனால் பில்கேட்ஸ் கூறிய ஒவ்வொரு தகவல்களும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பில்கேட்ஸ் சமீபத்தில் கூறியதாவது:-

கொரோனாவுக்கு பரிந்துரை செய்யப்படும் தடுப்பு மருந்துகள் சிறந்த பலன் கொடுப்பவையாக இல்லை. பரிந்துரை செய்யப்படும் மருந்துகள் உயிர்களை காப்பாற்றுமே தவிர, நம் அனைவரையும் அது பழைய பாதுகாப்பான நிலைக்கு கொண்டு வருமா என்பது தான் கேள்வி குறி தான், இதனால் கொரோனாவுக்கான சரியான மருந்து கண்டுபிடிக்கப்படாதவரை உலகில் உள்ள அனைவரும் கொரோனாவிடமிருந்து பாதுகாப்பு இல்லாதவர்களாக தான் இருப்போம்.

உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியான, அமைதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் கொரோனாவுக்கான சிறந்த, பாதுகாப்பான மருந்தினை கண்டுபிடிக்க வேண்டியது அவசியம். அந்த மருந்து கோடிக்கணக்கில் உற்பத்தி செய்யப்பட்டு உலகின் அனைத்து பாகங்களுக்கும் விரைவில் சென்றடைய வேண்டும். இது மாதிரியான தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்கு 5 ஆண்டுகள் ஆகலாம்.

ஆனால், மருத்துவ விஞ்ஞானிகள் அயராது முயற்சி செய்து இன்னும் 9 மாதங்கள் அல்லது 2 ஆண்டுகளில் கொரோனா தடுப்பு மருந்தினை கண்டுபிடித்து விடுவார்கள் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து