முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா வைரஸை சீனா தவறாக கையாண்டு விட்டது : வெள்ளை மாளிகை குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 2 மே 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : சீனாவின் வுகான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் 200-க்கும் அதிகமான நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் பெரும் பொருளாதாரச் சரிவைச் சந்தித்திருக்கும் வேளையில் சீனா கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு தனது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளது. 

இந்த நிலையில் கொரோனா வைரஸைப் பரப்பியது சீனாதான் என்று அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. சீனாவிலுள்ள வுகான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் வெளியேறி இருக்கக்கூடும் என்ற குற்றச்சாட்டை அதிபர் டிரம்ப் முன்வைத்தார். அது தொடர்பாக அமெரிக்கக் குழு வுகான் ஆய்வகத்தை சோதனை செய்ய சீனா அனுமதிக்க வேண்டும் என்று டிரம்ப் கேட்டுக்கொண்டார். ஆனால், அமெரிக்காவின் கோரிக்கையை சீனா மறுத்து விட்டது. அமெரிக்கா மட்டுமல்லாது ஜெர்மனி, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் சீனாவை விமர்சித்துள்ளன. 

இந்நிலையில் கொரோனா வைரஸ் விவகாரத்தை சீனா சரியாகக் கையாளவில்லை என்று அமெரிக்கா மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகையின் பத்திரிக்கை செயலாளர் கெய்லீ கூறும்போது, கொரோனா வைரஸ் விவகாரத்தை சீனா தவறாகக் கையாண்டு விட்டது. உங்களுக்கு சில எடுத்துக்காட்டுகளைக் கூறுகிறேன். அவர்கள் கொரோனா வைரஸின் மரபு மாதிரியை ஷாங்காங்கில் உள்ள பேராசிரியர் வெளியிடும் வரையில் வெளியிடவில்லை. அடுத்த நாள் சீனா தனது ஆய்வகத்தை மூடியது. கொரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்து பரவும் என்ற செய்தியை உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து தாமதமாக சீனா கூறியது என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து