முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவையும், டிரம்பையும் கேலி செய்து அனிமேஷன் வீடியோ வெளியிட்ட சீனா

ஞாயிற்றுக்கிழமை, 3 மே 2020      உலகம்
Image Unavailable

Source: provided

பெய்ஜிங் : அமெரிக்காவையும், டிரம்பையும் கேலி செய்து அனிமேஷன் வீடியோ ஒன்றை சீனா வெளியிட்டுள்ளது.  

கொரோனா வைரஸ் எங்கு தோன்றியது என்பதில் அமெரிக்கா, சீனா ஆகிய இருநாடுகளுக்கும் இடையே வார்த்தை மோதல்கள் முற்றி வருகிறது, சீனா மீது விசாரணை மேற்கொள்ள அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் சீன அரசு ஊடகத்தில் கொரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்கா எப்படி செயல்பட்டது என்பதையும் அதிபர் டிரம்பின் கொரோனா வைரஸ் குறித்த கருத்துகளையும் பகடி செய்து அனிமேஷன் செய்து வெளியிட்டுள்ளது. 

அதாவது கொரோனா போராளிகள், மருத்துவப் பணியாளர்களைக் குறிக்கும் முகக்கவசங்கள் அணிந்த பொம்மை ஒருபுறம் மற்றொரு புறம் அமெரிக்க சுதந்திர சிலை.இருதரப்புக்கும் நடக்கும் உரையாடல் என்று அமெரிக்காவை கேலி செய்து அனிமேஷன் வடிவத்தில் வெளியிட்டுள்ளது. அதில், நாங்கள் ஒரு வைரஸ் கண்டுபிடித்துள்ளோம் என்று ஒரு வாரியர் கூறுகிறார். அதற்கு அமெரிக்க சுதந்திர சிலை, அதனால் என்ன? இது வெறும் ப்ளூதான் என்று கூறுகிறது. பிறகு வாரியர்கள் வைரஸ் பற்றிய எச்சரிக்கைகளை விடுக்கிறது. சீனாவின் மைல்கல்களை எடுத்துக் கூறுகிறது.

ஆனால் சுதந்திர சிலை இதற்கு அதிபர் டிரம்ப் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியவற்றைக் கூறி மறுக்கிறது. அதாவது கொரோனாவின் தாக்கத்தை நீர்க்கச் செய்யுமாறு சுதந்திரச் சிலை பதிலளிக்கிறது. ஒரு கட்டத்தில், நீங்கள் உங்களையே கேட்டுக் கொண்டிருக்கிறீர்களா? என்று கேட்க சுதந்திர சிலையே காய்ச்சலினால் சிகப்பு நிறமாக மாறுகிறது. சுதந்திர சிலைக்கே ஐ.வி. டிரிப் ஏற்றப்படுகிறது. அப்போதும் சுதந்திரச் சிலை, நாங்கள் சுயமுரண்பாடுகள் கொண்டிருந்தாலும் நாங்கள்தான் எப்பவும் சரி என்று கூறுகிறது. இதற்கு பொம்மைகள், இதுதான் அமெரிக்காவிடம் பிடித்தது.

உங்கள் சீரான பதில்கள் இருக்கிறதே என்று முரண்பாடுகளிலும் ஒரு சீர் தன்மை இருப்பதாக அமெரிக்காவையும் டிரம்பையும் கடும் கேலி செய்து அனிமேஷன் படம் வெளியிட்டுள்ளது. இது லீகோ பொம்மைகள் போல் இருந்ததால், லீகோ நிறுவனம் இந்த அனிமேஷனுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து