முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிம் ஜாங் உன்னுக்கு நினைவு பதக்கம்: ரஷ்யா வழங்கியது

புதன்கிழமை, 6 மே 2020      உலகம்
Image Unavailable

Source: provided

பியாங்யாங் : 2-ம் உலகப்போர் வெற்றியின் 75 ஆண்டு நிறைவை முன்னிட்டு வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு ரஷ்யா பதக்கம் வழங்கியுள்ளது.

இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் நாஜி படையை ரஷ்யா வென்றதை நினைவுகூரும் வகையில், 75-வது ஆண்டு வெற்றி விழாவை இந்த மாத தொடக்கத்தில் மிகவும் விமரிசையாக கொண்டாட ரஷ்யா திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் ரஷ்யாவில் 2-ம் உலக போர் வெற்றிக் கொண்டாட்டங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் 2-ம் உலகப்போர் வெற்றியின் 75 ஆண்டு நிறைவை முன்னிட்டு வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு ரஷ்யா பதக்கம் வழங்கியுள்ளது. இது குறித்து வடகொரியா தலைநகர் பியாங்யாங்கில் உள்ள ரஷ்ய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

2-ம் உலகப்போரின் போது வடகொரியாவின் மண்ணில் இறந்த மற்றும் அங்கு புதைக்கப்பட்டுள்ள சோவியத் வீரர்களின் நினைவுச் சின்னங்களை பாதுகாப்பதில் கிம் ஜாங் உன் ஆற்றிய பங்களிப்புக்காக அவருக்கு நினைவு பதக்கம் வழங்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பியாங்யாங்கில் உள்ள மன்சுடே அரண்மனையில் நடைபெற்ற விழாவில் ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் மாட்செகோரா இந்த நினைவு பதக்கத்தை வடகொரியா வெளியுறவு மந்திரி ரி யோங் ஹோவிடம் வழங்கினார் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து