முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரான்சில் வரும் 11-ம் தேதி ஊரடங்கை விலக்க முடிவு : பிரதமர் எட்வர்ட் பிலிப் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 8 மே 2020      உலகம்
Image Unavailable

Source: provided

பாரிஸ் : பிரான்ஸ் நாட்டில் வருகிற 11-ம் தேதி திங்கட்கிழமை ஊரடங்கை விலக்கி கொள்ளப் போவதாக அந்நாட்டு பிரதமர் எட்வர்ட் பிலிப் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் மொத்தம் 174,791 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுவரை 25,987 பேர் உயிரிழந்துள்ளனர். வைரசை கட்டுப்படுத்த மார்ச் 17-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பொதுமக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது வைரஸ் தாக்கம் குறையத் தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் 178 பேர் மரணம் அடைந்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் 3000-க்கும் குறைவான நோயாளிகளே உள்ளனர்.

கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு விகிதம் குறைந்துள்ள நிலையில், வருகிற 11-ம் தேதி திங்கட்கிழமை ஊரடங்கை விலக்கிக் கொள்ளப் போவதாக அந்நாட்டு பிரதமர் எட்வர்ட் பிலிப் தெரிவித்துள்ளார். பாரிஸ் நகரில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் தொடரும் என பிரதமர் எட்வர்ட் பிலிப் கூறியுள்ளார்.

கொரோனா பாதிப்பின் அடிப்படையில் பிரான்ஸ் நாடு சிவப்பு மற்றும் பச்சை ஆகிய இரண்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கு ஏற்ப கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து