முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா அச்சம்: நெதர்லாந்தில் கண்ணாடி கூண்டு உணவகங்கள்

சனிக்கிழமை, 9 மே 2020      உலகம்
Image Unavailable

Source: provided

ஆம்ஸ்டெர்டேம் : நெதர்லாந்தில் கொரோனா தொற்று அச்சத்தினால் வாடிக்கையாளர்களுக்காக கண்ணாடி கூண்டு உணவகங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருகிறது. இதனால் அங்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் வெகுவாக தளர்த்தப்பட்டு வருகின்றன. நிறுவனங்கள் மீண்டும் பணியை தொடங்கி உள்ளன. பொது இடங்களில் மக்கள் நடமாட்டம் காணப்படுகிறது. எனினும் வெளியில் நடமாடும் போது தனிமனித இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டுமென்று மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நெதர்லாந்தில் வாடிக்கையாளர்களுக்காக கண்ணாடி கூண்டு உணவகங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. உணவக நிறுவனம் ஒன்று கண்ணாடியைக் கொண்டு சிறிய அளவு கூண்டு போன்ற அழகிய தோற்றத்தில் இதை தயாரித்து உள்ளது.

தனிமனித இடைவெளியை உறுதி செய்யும் வகையில் 2 அல்லது 3 பேர் மட்டும் அமர்ந்து உணவு உண்ணும்படி இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த உணவகங்களில் சோதனை முறையில் உணவும் பரிமாறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து