முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிபர் டிரம்பின் மகள் இவான்காவின் உதவியாளருக்கு கொரோனா பாதிப்பு

சனிக்கிழமை, 9 மே 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டிரம்பின் மகளான இவான்கா டிரம்பின் உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

அமெரிக்க வெள்ளை மாளிகையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மூன்றாவது நபர் இவராகும். இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்று வெளியிட்ட செய்தியில், இவான்கா டிரம்ப்பின் உதவியாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவருடன்தான் கடந்த மூன்று வாரமாக இவான்கா டிரம்ப் பணி நிமித்தமாக தொடர்பில் இருந்தார்.

இதனைத் தொடர்ந்து இவான்கா டிரம்புக்கும், அவரது கணவர் ஜேர்ட் குஷ்னருக்கும் கொரோனா தொற்றுப் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவில் இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸின் செய்தித் தொடர்பாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது இவான்கா டிரம்பின் உதவியாளருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு பணிபுரியும் பணியாளர்கள் மாஸ்க் மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து