முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பரவ உகான் சந்தையும் ஒரு காரணம் : உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்

சனிக்கிழமை, 9 மே 2020      உலகம்
Image Unavailable

Source: provided

ஜெனீவா : உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதில் சீனாவின் உகான் சந்தையின் பங்கு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக நாடுகளை தற்போது உலுக்கி வரும் கொரோனா வைரஸ், முதன் முதலாக சீனாவின் உகான் நகரிலிருந்துதான் தோன்றியது. கொரோனா வைரஸ் தொற்று, சீன நாட்டின் உகான் நகர கடல்வாழ் உயிரின சந்தையில் இருந்த வவ்வாலிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. அதைத் தொடர்ந்து அந்த சந்தை மூடப்பட்டது. ஆனால் அந்த வைரஸ், இயற்கையாக உருவானது அல்ல, அது உகான் நகரில் உள்ள வைரலாஜி இன்ஸ்டிடியூட்டின் ஆய்வுக்கூடத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டது, அங்கிருந்து கசிந்துதான் பரவி இருக்கிறது என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகிறது.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சீனா எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும், கொரோனா பாதிப்பு குறித்த புள்ளி விவரங்களை மறைத்ததாக சீனா மீது உலக நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதில் உலக சுகாதார அமைப்பும் சீனாவுக்கு ஆதரவாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. உலக சுகாதார அமைப்பும் கொரோனா விவகாரத்தில் சீனா சிறப்பாக செயல்பட்டதாக கூறியது. தற்போது  கொரோனா வைரஸை பரப்புவதில் சீனாவின் உகான் சந்தையின் பங்கு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் உணவு பாதுகாப்பு வைரஸ் நிபுணர் டாக்டர் பீட்டர் பென் அம்பரெக் கூறியதாவது:- 

உலக நாடுகளின் இந்த நிலைமைக்கு உகான் சந்தையும் ஒருகாரணம் என்பது தெளிவாக தெரிகிறது. ஆனால் எந்தளவுக்கு காரணம் என்பது எங்களுக்குத் தெரியாது. இந்த வைரஸ் உகான் சந்தையில் இருந்து வந்ததா அல்லது தற்செயலாக வைரஸ் உருவானதா எனக் கூறமுடியவில்லை. ஆனால் இந்த வைரஸ் சந்தையிலும் அதைச் சுற்றியும் காணப்பட்டன. வைரஸ் பரவாமல் தடுக்க சீனா ஜனவரி மாதம் தான் சந்தையை மூடியது என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து