முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகொரிய தலைவரை சுற்றி அழகிய 3 சக்திவாய்ந்த பெண்கள்

திங்கட்கிழமை, 11 மே 2020      உலகம்
Image Unavailable

Source: provided

நியூயார்க் : வடகொரிய தலைவரை சுற்றி அழகிய 3 சக்திவாய்ந்த பெண்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் குறித்து உறுதிபடுத்தாத பல தகவல்கள் வெளியாகின. அமெரிக்கா, சீனா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து வெளியாகும் தகவல்கள் அனைத்தும் வெவ்வேறாக இருந்தன. இதய சிகிச்சை தோல்வியில் முடிந்ததால் கோமாவில் இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. மற்றொன்று ஏவுகணை சோதனையின் போது அவருக்கு பாதிப்பு ஏற்பட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இன்னொன்று கடற்கரையில் நடக்க சென்ற கிம் ஜாங் மாரடைப்பால் குப்புற சரிந்தார் எனவும், அவரை மீட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் வெளியாகியுள்ளது. 

கிம் ஜாங் உன் உயிருடன் இருக்கிறார். ஆனால் நடக்கவோ எழுந்து நிற்கவோ முடியவில்லை என கூறப்பட்டு இருப்பினும் அண்டை நாடான தென் கொரியா, கிம் ஜாங் ஆரோக்கியத்துடனும் துடிப்புடனும் உள்ளார் என கூறியது அதன் படி வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் 20 நாட்களுக்கு பிறகு பொதுவெளியில் தோன்றி ஆச்சரியப்படுத்தினார். தலைநகர் பியோயாங்கில் இருக்கும் உரத்தொழிற்சாலை விழாவில் கலந்து கொண்டார். 38 வயதாகும் வடகொரிய தலைவரின் உள்நிர்வாக வட்டத்தில் மூன்று வலிமையான மற்றும் அழகான பெண்கள் உள்ளனர்.

இந்த மூவரில் கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங். சமீபத்திய வாரங்களில், கிம்மின் தங்கை, நாட்டின் சக்திவாய்ந்த அமைப்பு மற்றும் வழிகாட்டல் துறையின் தலைவரான கிம் யோ ஜாங், ஊடகங்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் கிம்மிற்கு அடுத்த வாரிசு கிம் யோ ஜாங் தான் என்றும் அவர்தான் வட கொரியாவின் அடுத்த தலைவராக முடியும் என்று தகவல்கள் கூறுகின்றன. நவீன புதிய ஆயுதங்கள் மீது அதிக மோகம் கொண்ட கிம் யோ, வடகொரியாவின் அடுத்த தலைவராக தம்மை தயார் படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

பெண் என்பதால் வடகொரிய ஆளும் வர்க்கம், கிம் யோவை புறக்கணிக்காது என்றும், கிம் குடும்பத்தாரை அங்குள்ள மக்கள் கடவுளுக்கு நிகராகவே பார்க்கிறார்கள். கம்ப்யூட்டர் அறிவியல் பட்டதாரியான கிம் யோ, சமீப காலமாக தமது சகோதரருக்கு உதவியாக அரசு அலுவல்களிலும் ஈடுபட்டு வருகிறார். தமது 9 - வது வயதில் இருந்தே சுவிட்சர்லாந்தில் கல்வி பயின்ற கிம் யோ, பல்கலைக்கழக படிப்பை வடகொரியாவுக்கு திரும்பிய பின்னர் முடித்தார். 

இரண்டாவது வட கொரியாவின் ஒரு பாப் நட்சத்திரம் மற்றும் கிம்மின் மனைவி ரி சோல் ஜூ எந்தவிதமான வம்புகளையும் உருவாக்காமல் யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல் செல்வாக்குடன் வளர்ந்தவர். ரி - கிம் தம்பதியருக்கு இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் உள்ளனர். ரி சோல்-ஜூ ஒரு காலத்தில் பாடகராக இருந்தவர் ஆவார். முன்னாள் சி.ஐ.ஏ. ஆய்வாளர் ஜங் எச். பாக் எழுதிய புதிய புத்தகம் ஒன்றில் கிம் தன்னை வட கொரியாவின் ஜான் எஃப் கென்னடி என்று கருதுவதாகவும், அவரது மனைவியை ஒரு நாகரீகமான ஜாக்கி கென்னடியாகவே பார்க்கிறார் என்றும் கூறி உள்ளார்.

கிம்மின் மனைவிக்கு ஒரு உண்மையான அரசியல் தலைவர் என்ற லட்சியங்கள் இருப்பதாக நான் நினைக்கவில்லை, ஆனால் அவருக்கு மேல்தட்டு மக்களிடமிருந்து மரியாதை உண்டு என்று பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் முன்னாள் உறுப்பினரான வட கொரிய ஆய்வாளர் புரூஸ் பெக்டோல் நியூயார்க் போஸ்ட்டிடம் தெரிவித்து உள்ளார். கிம்மிற்கு ஏதாவது நடந்தால் அவரும் குழந்தைகளும் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். கிம்மின் மாமா கொல்லப்பட்டதைப் போல அவரை கொல்ல மாட்டார்கள். அவரை நாட்டை விட்டு வெளியேற்றக்கூடும் என்று அவர் கூறினார்.

ஆனால் மனைவி மற்றும் சகோதரியின் பாத்திரங்களை சிக்கலாக்கும் மூன்றாவது பெண் ஒருவர் இருக்கிறார். அவர்தான் ஹியோன் சாங் - வோல் (வயது 48) கிம்மின் எஜமானி என்று பலரால் நம்பப்படுகிறது. வட கொரியாவின் ஸ்பைஸ் கேர்ள்ஸ் என்றும் அழைக்கப்படும் பெண் மோரன்பாங் பேண்டின் முன்னணி பாடகராக விளங்கியவர் ஹியோன். சுவாரஸ்யமாக, இந்த மாத தொடக்கத்தில் கிம் போலவே, அவரும் ஒரு கட்டத்தில் இறந்துவிட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் கிம் போலவே, அவரது மரணம் குறித்த செய்திகள் வதந்தியாக இருந்தது. அவர் இப்போது கிம்மின் மிக நெருங்கிய உதவியாளராக உள்ளார்.

மேலும் ஒரு காலத்தில் கிம் சகோதரியால் நடத்தப்பட்ட செயல் இயக்குநர் வேலையை ஏற்றுக்கொண்டு உள்ளார். சில அறிக்கைகள் ஹியோன் அவரது தோழி மட்டுமே அல்லது அவர் மறைந்த தந்தை கிம் ஜாங் இல் லின் கடைசி காதலராகவும் இருக்கலாம் என்று கூறுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து