முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழப்பமான பேரழிவை ஏற்படுத்தி விட்டது டிரம்ப் நிர்வாகம் : ஒபாமா குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 11 மே 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா கொரோனா வைரஸ் தொற்று நோயை கையாளும் விவகாரத்தில் டிரம்ப் நிர்வாகம், முற்றிலும் குழப்பமான பேரழிவை ஏற்படுத்தி விட்டதாக குற்றம் சாட்டினார். 

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, தன்னோடு வெள்ளை மாளிகையிலும், தனது நிர்வாகத்திலும் பணியாற்றியவர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமையன்று இரவு தொலைபேசி வழியாக உரையாடி உள்ளார். அப்போது அவர் கொரோனா வைரஸ் தொற்றுநோயை கையாளும் விவகாரத்தில் டிரம்ப் நிர்வாகம், முற்றிலும் குழப்பமான பேரழிவை ஏற்படுத்தி விட்டதாக குற்றம்சாட்டினார்.

மேலும் கொரோனா வைரஸ் பரவலுக்கு டிரம்ப் நிர்வாகத்தின் மோசமான தடுப்பு நடவடிக்கை, உலகளாவிய நெருக்கடியின் போது அரசாங்கத்துக்கு ஒரு வலுவான தலைமை ஏன் தேவைப்படுகிறது என்பதற்கான முக்கிய நினைவூட்டலாக அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டார். 

கொரோனா வைரசுக்கு எதிராக டிரம்ப் எடுத்து வந்துள்ள நடவடிக்கையில் ஊசலாட்டத்தை காண முடிந்ததாக ஒபாமா சுட்டிக்காட்டி உள்ளார்.கொரோனா வைரஸ் மறைந்து விடும் என்று டிரம்ப், பிப்ரவரி மாதம் கூறியதாகவும், மார்ச் மத்தியில், இது ஒரு தீவிர பிரச்சினை என ஒப்புக்கொண்டதாகவும், ஒரு சிறந்த அரசாங்கம் இருந்திருந்தால்கூட கொரோனா வைரஸ் விவகாரம் மோசமாகத்தான் இருந்திருக்கும் எனவும் ஒபாமா குறிப்பிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து