முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரசிகர்கள் இன்றி பிரெஞ்ச் ஓபன் நடக்கும்: போட்டி அமைப்பாளர்கள் திட்டவட்டம்

திங்கட்கிழமை, 11 மே 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

பாரீஸ் : குறைந்த பட்சம் ரசிகர்கள் இல்லாமலாவது பிரெஞ்ச் ஓபனை நடத்துவோம் என போட்டி அமைப்பாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். 

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் மே 24 - ந் தேதி முதல் ஜூன் 7-ந்தேதி வரை நடக்க இருந்தது. கொரோனா வைரஸ் அச்சத்தால் இந்த போட்டி தள்ளிவைக்கப்பட்டு செப்டம்பர் 20 - ந் தேதி முதல் அக்டோபர் 4-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிலைமையை பார்க்கும்போது இந்த போட்டி ரசிகர்கள் இன்றி பூட்டிய மைதானத்தில் நடத்தப்படலாம் என்று பிரெஞ்ச் டென்னிஸ் சங்க தலைவர் பெர்னர்ட் குடிசெலி தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் கூறுகையில், ரசிகர்கள் இன்றி இந்த போட்டி நடத்தப்படுவதற்கும் வாய்ப்பு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. போட்டி வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்பதே முக்கியம். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ரசிகர்கள் இல்லாமல் நடந்தாலும் அதை டி.வி.யின் மூலம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்என்றார். ஆண்டுதோறும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியை ஏறக்குறைய 5 லட்சம் ரசிகர்கள் நேரில் கண்டுகளிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து