முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யாவில் நல்வாழ்வு மையத்தில் தீ விபத்து - 9 பேர் உடல் கருகி பலி

செவ்வாய்க்கிழமை, 12 மே 2020      உலகம்
Image Unavailable

Source: provided

மாஸ்கோ : ரஷ்யாவில் நல்வாழ்வு மையத்தில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்சி 9 பேர் உடல் கருகி பலியாகினர்.

ரஷ்யா தலைநகர் மாஸ்கோ அருகே உள்ள கிராஸ்னோகோர்க் நகரில் தனியாருக்கு சொந்தமான நல்வாழ்வு மையம் உள்ளது. இங்கு நோய்வாய்ப்பட்ட மற்றும் வயது முதிர்ந்த நபர்கள் சுமார் 30 பேர் தங்க வைக்கப்பட்டு கவனிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில், கடந்த ஞாயிறன்று இரவு நல்வாழ்வு மையத்தில் திடீரென தீப்பிடித்தது.

மளமளவென கொழுந்து விட்டு எரிந்த தீ, கண் இமைக்கும் நேரத்தில் கட்டிடம் முழுவதிலும் பரவியது. அதனை தொடர்ந்து, நல்வாழ்வு மையத்தில் இருந்தவர்கள் அலறியடித்தபடி அங்கிருந்து வெளியேற தொடங்கினர். அதற்குள் தீ, நாலாபுறமும் சூழ்ந்து கொண்டதால் பலர் உள்ளே சிக்கிக் கொண்டனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் தீயின் கோரப்பிடியில் 9 பேர் உடல் கருகி பலியாகினர். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து