முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா ஒரு மனநோய்தான் பெலாரஸ் நாட்டின் அதிபர் அலெக்சாண்டர் லுக்சங்கோ பேச்சு

செவ்வாய்க்கிழமை, 12 மே 2020      உலகம்
Image Unavailable

Source: provided

பெலாரஸ் : கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி உலகமே தவித்துக் கொண்டிருக்கும் வேளையில், கொரோன ஒரு மனநோய் என்று பெலாரஸ் நாட்டின் அதிபர் வர்ணித்துள்ளார்.

கொரோனா வைரசின் கோரத்தாண்டவத்தால் உலக நாடுகளில் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் உயிர்பலிகள் நிகழ்ந்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், கிழக்கு ஐரோப்பிய நாடான பெலாரஸ் கொரோனாவை கொஞ்சம் கூட மதிக்காமல், இரண்டாம் உலகப் போரின் 75-வது வெற்றி விழாவை பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளது. பெலாரஸ் தலைநகர் மின்ஸ்கில் நடைபெற்ற பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்த விழாவில் பேசிய அந்நாட்டின் அதிபரான அலெக்சாண்டர் லுக்சங்கோ,

கொரோனா வைரஸ் தொற்று என்று எதுவுமில்லை. கொரோனா வைரஸ் என்பது ஐரோப்பிய நாடுகளின் மனநோயே அன்றி வேறொன்றுமில்லை. இதற்காக ஊரடங்கை பிறப்பித்தால் நாட்டின் பொருளாதாரமே பாதிக்கப்படும் என்று பேசியுள்ளார். பெலராஸ் அதிபரின் இந்தப் பேச்சு அந்நாட்டு மக்களை மட்டுமின்றி உலக நாடுகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக தலைநகர் மின்ஸ்கில் ஹாக்கி விளையாட்டு போட்டியை துவக்கி வைத்து பேசிய அவர், நாட்டு மக்கள் அனைவரும் எப்போதும்போல் பணிபுரியுங்கள். வயல்வெளிகளில் வேலை செய்யுங்கள். ஐஸ் ஹாக்கி விளையாடுங்கள். உடம்பை மசாஜ் செய்து கொள்ளுங்கள். விளையாட்டுதான் வைரசுக்கு எதிரான சிறந்த மருந்து எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து