சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு

வியாழக்கிழமை, 14 மே 2020      வர்த்தகம்
gold-jewelry 2020 05 14

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு 232 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

தங்கம் விற்பனை மீண்டும் தொடங்கியுள்ளதால் மக்களிடையே தேவை அதிகரித்துள்ள நிலையில் விலை உயர்வு காணப்படுகிறது. நேற்று முன்தினம் விலை குறைந்திருந்தது. சென்னையில் நேற்று (மே 14) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,472 ஆக உயர்ந்திருந்தது. நேற்று முன்தினம் இதன் விலை 4,443 ஆக இருந்தது. நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு 29 ரூபாய் உயர்ந்தது.

அதே போல, நேற்று முன்தினம் 35,544 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் நேற்று 232 ரூபாய் உயர்ந்து 35,776 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலையும் நேற்று  உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.46.70 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் இதன் விலை ரூ.46.60 ஆக இருந்தது. ஒரு கிலோ வெள்ளி 46,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து