Idhayam Matrimony

இந்திய அரசின் ரூ. 20 லட்சம் கோடி திட்டங்களுக்கு ஐ.நா. பாராட்டு

வெள்ளிக்கிழமை, 15 மே 2020      உலகம்
Image Unavailable

Source: provided

நியூயார்க் : பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை சீா்செய்யும் நோக்கில் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்புத் திட்டங்களுக்கு ஐ.நா. பொருளாதார நிபுணா்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் நாடு முழுவதும் கடந்த 51 நாள்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.  கொரோனா ஊரடங்கால் தொழில்துறைகள் முடங்கியுள்ள நிலையில், பொருளாதாரம் படுவீழ்ச்சி அடைந்து வருகிறது. இதனை மீட்கும் வகையில் 20 லட்சம் கோடிக்கான சலுகைகள் அறிவிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

அதன்படி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், முதல் கட்டமாக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உட்பட பல்வேறு துறைகளுக்கு, 5.94 லட்சம் கோடிக்கான சலுகை திட்டங்களை அறிவித்தார். அதை தொடர்ந்து  2வது கட்டமாக, 3.16 லட்சம் கோடிக்கான சலுகைகளை அறிவித்தார்..

இதுதொடர்பாக, உலகளாவிய பொருளாதார கண்காணிப்பு பிரிவு தலைவர் ஹமிது ரஷித் கூறுகையில், இந்தியாவின் அறிவிப்பு மிகவும் வரவேற்புக்குரிய நிகழ்வு. இந்தியா அறிவித்துள்ள சிறப்பு பொருளாதாரத் திட்டங்கள் அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) மதிப்பில் 10 சதவீதம் ஆகும். இது வளா்ந்து வரும் நாடுகள் அறிவித்த சிறப்புத் திட்டங்களில் அதிகபட்ச அளவாகும். பெரும்பாலான வளா்ந்து வரும் நாடுகள் அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 0.5 முதல் 1 சதவீதம் வரையிலான பொருளாதாரத் திட்டங்களையே அறிவித்திருந்தன என்று கூறினார். 

ஐ.நா.வின் சமூக மற்றும் பொருளாதார விவகாரங்கள் துறை அதிகாரி ஜுலியன் ஸ்லோத்மேன் கூறுகையில், இந்திய அரசு அறிவித்துள்ள பொருளாதார சிறப்புத் திட்டங்கள் உள்நாட்டின் தேவையை அதிகரித்து உற்பத்தியை அதிகரிக்கும். இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தபோதே அந்நாட்டு அரசு பொது முடக்கத்தை அமல்படுத்தியது வரவேற்கத்தது.

அதன் காரணமாக நாட்டின் பொருளாதாரத்துக்கும் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டது. மக்கள் அதிக அளவில் செலவு செய்யும் வகையிலான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்வது மிகவும் அவசியம் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து