முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கத்தாரில் மாஸ்க் இன்றி வெளியே நடமாடினால் ரூ. 41 லட்சம் அபராதம்

சனிக்கிழமை, 16 மே 2020      உலகம்
Image Unavailable

Source: provided

தோஹா : கத்தாரில் மாஸ்க் அணியாமல் வெளியே நடமாடுவோருக்கு 2 லட்சம் ரியால்கள் (இந்திய மதிப்பில் ரூ.41 லட்சம்) வரை அபராதமாக விதிக்கப்படுமென அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

வளைகுடா நாடான கத்தாரில் புதிதாக கடந்த 24 மணி நேரத்தில் 1,733 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,272 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கத்தார் உள்துறை அமைச்சர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:

வரும் ஞாயிறு முதல் வெளியே செல்வோர் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகிறது. உத்தரவை பின்பற்ற தவறுவோருக்கு 2 லட்சம் ரியால்கள் வரை அபராதமும், 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும். தனியாக வாகனத்தை ஓட்டி வரும் நபருக்கு மட்டும் இதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து