முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உண்மை தகவல்களை மூடி மறைத்ததால் சீனாவுக்கு எதிராக 18 அம்ச திட்டம்: அமெரிக்கா அறிவிப்பு

சனிக்கிழமை, 16 மே 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : கொரோனா தொற்று குறித்து, உண்மை தகவல்களை உலகுக்கு சொல்லாமல் மூடி மறைத்ததற்கு, சீனாவை பொறுப்பேற்க வைக்க, 18 அம்ச திட்டத்தை, அமெரிக்க செனட் உறுப்பினர் அறிவித்து உள்ளார்.

இது குறித்து, அமெரிக்க செனட் உறுப்பினர் தோம் டிலிஸ் கூறியதாவது:-

சீனாவின் இந்த திட்டமிட்ட சதி செயல், அமெரிக்காவை மட்டுமல்லாமல், பல்வேறு உலக நாடுகளையும் கடுமையாக பாதித்துள்ளது. தன் தவறை சீனா உணர வேண்டும் என்றால், அமெரிக்கா சில நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அமெரிக்க ராணுவம் கேட்டுள்ள, 1.50 லட்சம் கோடி ரூபாய் நிதியை, உடனடியாக வழங்க வேண்டும். இந்தியா, தைவான் மற்றும் வியட்நாம் உடனான ராணுவ உறவை பலப்படுத்த வேண்டும். அந்நாடுகளுக்கு, ஆயுத விற்பனையை அதிகரிக்க வேண்டும். சீனாவில் உள்ள அனைத்து உற்பத்தி நிறுவனங்களும், மீண்டும் அமெரிக்காவுக்கு இடம் மாற்றப்பட வேண்டும்.

சீன ஏற்றுமதி பொருட்களை சார்ந்துள்ள நிலையில் இருந்து, அமெரிக்கா மாற வேண்டும். அமெரிக்க தொழில்நுட்பத்தை திருடி, அதை மீண்டும் அமெரிக்காவுக்கே விற்பனை செய்யும் சீனாவின் போக்கு, தடுத்து நிறுத்தப்பட வேண்டும். சீன, ஹாக்கர்களிடம் இருந்து, பாதுகாத்துக் கொள்ளக் கூடிய அளவுக்கு, நம் தொழில்நுட்பத்தை வலுவாக்க வேண்டும். ஹுவேய்' போன்ற சீன தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் அவர்களின் தயாரிப்புகளுக்கு, அமெரிக்காவில் தடை விதிக்கப்பட வேண்டும். நம்மை ஆதரிக்கும் நாடுகளும், இதே தடையை நடைமுறைபடுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து