முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா விவகாரத்தில் மோதல்: சீன அதிபருடன் பேச விரும்பவில்லை : அதிபர் டிரம்ப் அதிரடி பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 17 மே 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : கொரோனா வைரஸ் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக சீன அதிபர் ஜின்பிங்குடன் பேச விரும்பவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்று, சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் 1-ல் தோன்றியது. இப்போது சுமார் 200 நாடுகளில் பரவி விட்டது. இந்த வைரஸ் தொற்றுநோய் தோற்றம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.

இந்த நிலையில் அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியின் போது, சீன அதிபர் ஜின்பிங்குடன் இப்போது நான் பேச விரும்பவில்லை. அடுத்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்று கூறினார். அப்போது ஒரு நிருபர், எதற்காக சீன அதிபர் ஜின்பிங்குடன் பேச விரும்பவில்லை என்று கூறுகிறீர்கள்? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு டிரம்ப் பதில் அளித்த போது, இந்த ஆண்டு தொடக்கத்தில் செய்யப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தின்படி கடந்த ஆண்டை விட நிறைய அமெரிக்க பொருட்களை சீனா வாங்குகிறது. அவர்கள் வர்த்தக ஒப்பந்தத்தின்கீழ் நிறைய செலவு செய்கிறார்கள். ஆனாலும் அதற்காக நான் கொஞ்சம் சுவையை இழந்தேன். நீங்கள் புரிந்து கொள்ளலாம் என குறிப்பிட்டார். 

முன்னதாக டிரம்ப் இந்த விவகாரம் தொடர்பாக விரிவாக எடுத்துரைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் சீனா உடனான வர்த்தக ஒப்பந்தம் பற்றி பேச விரும்பவில்லை. சீனா நமது பொருட் களை நிறையவே வாங்குகிறது. ஆனால் கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து வந்த போது, இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் மை உலர்ந்து விட்டது. எனவே நான் இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் சிலிர்த்துப் போய் விடவில்லை. கொரோனா வைரஸ் தொற்று நோயால் இத்தனை பாதிப்பு ஏற்பட்டு இருக்கக் கூடாது.

இது சீனாவில் இருந்து வந்ததுதான். இது வெளி உலகுக்கு பரவுவதற்கு முன்பாகவே தடுத்து நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். இப்போது 186 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ரஷ்யா இப்போது மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் ஒவ்வொரு நாட்டையும் பார்க்கிறீர்கள். நீங்களும் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறலாம் என்றும் டிரம்ப் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து