முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெருக்களில் கிருமி நாசினி தெளிப்பதால் கொரோனா வைரசை அழிக்க முடியாது : உலக சுகாதார அமைப்பு தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 17 மே 2020      உலகம்
Image Unavailable

Source: provided

ஜெனீவா : தெருக்களில் கிருமி நாசினி தெளிப்பதால் கொரோனா வைரசை அழிக்க முடியாது என்பதை உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.  

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுத்து வருகின்றன. அதில் நோய் பரவாமல் தடுக்க தெருக்களில் கிருமி நாசினி மற்றும் மருந்துகள் தெளிக்கப்படுகின்றன. ஆனால் தெருக்களில் கிருமி நாசினி தெளிப்பதால் கொரோனா வைரசை அழிக்க முடியாது என்பதை உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு கூறி இருப்பதாவது;- தெருக்கள் மற்றும் மார்க்கெட் போன்ற பகுதிகளில் கிருமி நாசினி மற்றும் மருந்துகள் தெளிப்பதால் கொரோனா வைரஸ் அல்லது மற்ற நோய் கிருமிகளை அழிக்க முடியாது. ஏனென்றால் கிருமி நாசினிகள் அழுக்கு மற்றும் குப்பைகளால் செயலிழக்கப்படுகின்றன. நோய் கிருமிகளை செயல் இழக்க செய்யும் நேரத்திற்குள் அனைத்து பகுதிகளிலும் ரசாயன தெளிப்பு அனைத்து மேற்பரப்புகளையும் போதுமானதாக செல்ல வாய்ப்பில்லை. அதே வேளையில் கிருமி நாசினிகள் அதிக அளவு சாலையில் தெளிப்பது மக்களின் உடல் நலனுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். அதே போல் எந்த சூழ்நிலையிலும் தனி நபர்கள் மீது கிருமி நாசினி தெளிக்க பரிந்துரைக்கப்படவில்லை. மக்கள் மீது கிருமி நாசினி தெளித்தால் உடல் பாதிப்புகள் ஏற்படும்.

இது உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் தீங்கை விளைவிக்கும் மற்றும் பாதிக்கப்பட்ட நபரின் நீர்த்துளிகள் மற்றும் தொடர்பு மூலம் வைரசை பரப்பும் திறனை குறைக்காது. மக்கள் மீது குளோரின் மற்றும் பிற நச்சு ரசாயனத்தை தெளிப்பது கண், தோல் எரிச்சல், மூச்சு குழாய் அழற்சி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். கிருமி நாசினி பயன்படுத்த வேண்டுமென்றால் ஒரு துணியால் செய்யப்பட வேண்டும். கிருமி நாசினி நனைக்கப்பட்ட துணியால் துடைக்க வேண்டும்.

வைரஸ் பலவகையான மேற்பரப்புகளில் பல நாட்கள் இருக்கக் கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனாலும் அந்த அதிகபட்ச காலங்கள் கோட்பாட்டு ரீதியானவை என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து